பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 லொதுங்கித்து யர்கூர நின்றதும் தம்முள்ளத்தே தோன்க அப்பொழுது மனமுருகி,

    "அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
     எந்தையு முடையேமெங் குன்றும் பிறர் கொளார்
     இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
     வென்றெறி முரசின் வேந்தர் எங்
     குன்றுங் கொண்டார்யாம் எந்தையு மிலமே"

என்னும் பாடலைப் பாடினரே தவிர பாரியின் முடிவைக் குறித்து ஒன்றும் கூறவில்லை.

    பிற சங்ககாலப் புலவர்கள் பாரியின் மனை, சுனை, வீரம். கொடை முதலியவற்றைப் பற்றி பாடினரே தவிர, அவனது வாழ்க்கையின் முடிவைப் பற்றிக் கூறவில்லை. ஒருவேளை கொலையின் கொடுமையை அஞ்சி அவர்கள் பாடவில்லையோ என்ற ஐயம் எழலாம். ஆனல் அவ்வாறு அஞ்சக் கூடிய தன்மை தமிழ்ப் புலவர்களிடம் கிடையாது. சிறு குற்றத்திற்காக அஞ்சாமல் எதிர்த்து வாதாடும் தன்மையுடைய புலவர்கள் பெருங் குற்றமாகிய கொலைக் குற்றத்தை எதிர்க்காமலிருந்திருக்க முடியாது.
    பாரி உண்மையாகவே கொலைசெய்யப்பட்டிருப்பின் பாரிக்காகவே உயிர் வாழ்ந்த கபிலர் கட்டாயம் அதனைப் பாடியேயிருப்பார். ஆனால் உடன் மாயத் துணிந்த கபிலரைப் பாரி தடுத்ததாகக் குறிப்பு உள்ளது. "ஒருங்கு வரல் விடாது ஒழிக" என்று பாரி தன்னைத் தடுத்ததாகக் கபிலர் பாரி குற்றுயிராயிருக்கும்பொழுது பாடியுள்ளார். பின் அவர் பாரியின் குடும்பப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். பாரி மகளிர் இருவரையும் தகுந்த தலைவனிடம் ஒப்புவித்தற் பொருட்டு கபிலர் அரும்பாடுபட்டார். அவர் ஊர் ஊராக அலைந்தார். இளவிச்சிக்கோ என்ப வனிடம் அவர் சென்று அம்மகளிரது உயர் குடிப்பிறப்பு