பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் iif தாத்தா வைத்த மரத்திலே தங்க நிற மாம்பழம்! பாட்டி வைத்த மரத்திலே பந்து போல் விளாம் பழம்! மாமா வைத்த மரத்திலே முத்து முத்தாய் மாதுளை! மாமி வைத்த மரத்திலே மஞ்சள் நிற ஆரஞ்சு அப்பா வைத்த மரத்திலே ஆளுயர முருங்கைக் காய்! அம்மா வைத்த மரத்திலே அடுக்கடுக்காய் வாழைக்காய்! தொட்டிக் குள்ளே நட்டு வைத்தேன் நானும் ஒரு சுண்டைக்காய்! தண்ணிர் விட்டேன் முளைத்திருக்கு காகம் போட்ட வெண்டைக் காய்! இவை குழ. கதிரேசன் படைத்தவை. இவற்றையும் விருப்பப்படி ஆட்டத்திலும் பாட்டத்திலும் கையாள லாம். குழி: கதிரேசனின் சிறு சிறு நூல்களாக வெளி வந்தவை அனைத்தும் தேர்ந்த தொகுப்பாக-"மழலைப் பூங்கொத்து’ என்ற தலைப்பில்-பல்வேறு வித வண்ண விளக்கப் படங்களுடன் அச்சாகிக் கொண்டுள்ளன. இவை அடங்கிய தொகுதி குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மலரும் உள்ள என்ற தொகுப்பு நூல் போல், அதனை விடச் சில கூறுகளில் சிறந்ததாகத் திகழும் என்பதற்கு ஐயம் இல்ல்ை அடியேனின் அன்ரிந்துரையும் அடங்கியது. இதில் அடங்கிய சில பாடல்கள் சிறந்த இசைப்பாடகர்களால் பாடப் பெற்று (1) மழலைப் பூக்கள் (2) தொப்பைக் Ĝar ĝı (3) Ĝu& ú