பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 14 இலக்கிய வகையின் வளர்ச்சியும் ஆற்றல்கள் வளர்ச்சியடைதல் இறைவனின் திரு வுள்ளக் குறிப்பின்படி நிறைவேறுவதால் அவை தவறாகா என்று நம்பினார். ஆகவே, இயற்கையை யொட்டி கல்வி கற்பித்தல் நடைபெற வேண்டும் என்பது அவர் கருத்தாகும். அவர் கொள்கைப்படி பள்ளி என்பது குழந்தைகளின் பூங்கா. பள்ளியில் பயிலும் குழந்தைகள் பூங்காவில் வளரும் செடிகள். குழந்தைகளைக் கண்காணிக்கும் ஆசிரியர் செடிகளைப் பாதுகாக்கும் தோட்டக்கார்ன். எனவே, கற்கும் குழந்தைகள் தாமாகச் செயற் பட்டும் கருத்து களைத் தாமாக வெளியிட்டும் வளர்ச்சியடைய வேண்டும் என்று ஃபிராபெலின் விருப்பமாகும். அவற்றை அவர் பாட்டுகள் வாயிலாகவும், படைப் பாற்றலின் துணைகொண்டும் எய்துவிக்கலாம் என்றும் கருதினார். ஃபிராபெலின் கல்விமுறை கிண்டர் கார்டன் முறை என்பதாகும். 'கிண்டர் கார்ட்டன்’ (Kinter gartem) என்ற செருமானிய சொல் குழந்தைகளின் தோட்டம்’ என்று பொருள்படும். 'ஃபிராபெல் குழந்தைகளின் இளமைப் பருவமே வளர்ச்சியின் முக்கிய பருவம் எனக் கருதினார். குழந்தையின் வளர்ச்சியிலும் இளந்தாவரத் தின் வளர்ச்சியிலும் ஃபிராபெல் சில பொதுவான பண்பு களைக்கண்டார். இப்பண்புகளை ஆசிரியர் நன்கு அறிந் திருத்தல் வேண்டும் என்பது அவர் கருத்து. தன்னியக் கம் என்பது, மனத்தின் முக்கியமான பண்பாகும். அது குழந்தையின் விளையாட்டு மூலம் வெளிப்படுகின்றது. எனவே, குழந்தை விளையாட்டு மூலம்தான் முழு வளர்ச்சியடைய வேண்டும். ஃபிராபெல் பிற்கால மனிதனுக்குத் தேவையான வேலைதான் குழந்தைப் பருவத்தில் விளையாட்டு வடிவாக வெளிப்படுகின்றது என்று கூறினார். எனவே, குழந்தைகட்கு விளையாட்டு முறையில்தான் கற்பிக்க வேண்டும் என்பது இவ்வறிஞ