பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 139 மருவி மயங்கும் இவர்கள் பிறகு தவழவிட்டு ஊரெல்லாம் பெருமை உரைக்கும் இவர்கள் எல்லாம் இவர்கள் தாம்-வேறு யார் சொல்வார்கள்? கூடாதாம் பச்சையம். எழுதுவன எல்லாம் எழுத்தாளனின் சொத்த அநுபவம் ஆகுமா? என்று வினவும் பாங்கில் எழுத் திலே பச்சை என்றால் எழுத்தாளனின் மனசிலே பச்சை என்றாகுமா? நாடகத்தில் பாத்திரங்கள் பேச்செல்லாம். ஆசிரியர் பேச்சா? நரகம்’ என்து நரகமா? நரகத் தலைவனின் நரகமா?' என்றெல்லாம் வினாக்களை எழுப்பிக் கவிஞரே பேசுகிறார்... முழு விளக்கம் விரிவஞ்சி ஈண்டு தரப் பேற வில்லை:. (4) கனவே டை : ஃபிராய்டின் மூல தத்துவத்தி லிருந்து காலப் போக்கிற்கு ஏற்ற சில மாறுதல்களோடு கிளைத் தெழுந்ததுதான்.இந்த நனயோடைத் தத்துவம். இஃது இலக்கியத்தில் உத்தி பற்றிய ஒரு கொள்கை யாகப் பயன்படுத்தப் பெறுகின்றது. பெரும்பாலும் இவ்வுத் தி புதினங்களில்தான் இடம் பெறுகின்றது. புதினத்தில் இடம் பெறும் ஒரு கதை மாந்தரின் புலனுணர்வுக் காட்சிகளும் எண்ணங்களும் ஒன்றுக் கொன்று தொடர்பின்றித் தோன்றுவதை எழுதிக் காட்டும் ஒரு வகை உத்தியே நனவோடை. உறக்க நிலை விழிப்பு நிலை போன்ற வேறுபட்ட உண்மை நிலைகளைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் காரண காரிய இயைபுப் பொருத்தமினறி வெளிப்படுத்துவது இவ் வுத்தியின் போக்காகும். இன்றைய புதுக் கவிதைகள் சிலவற்றில் இந்த உத்திமுறை கையாளப் பெற்றிருப் பதைக் காணலாம். சி. மணியன் கரகம்’ என்ற புதுக்