பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 33 சிறப்புடையன என்பது ஆசிரியர் தொல்காப்பியரின் கருத்தாகும்’ என்று கூறுவர் யாப்பருங்கல ஆசிரியர். இளம்பூரணரும் வெள்ளடியால் என்னாது வெள்ளடி யியலால்' என்றமையால், வெண் டளையால் வந்து ஈற்றடி முச்சீராய் வருவனவும், பிற தளையால் வந்து ஈற்றடி முச்சீராய் வருவனவும் கொள்ளப்படும்' என்பர். இவற்றுள் வெண்டளையால் வந்த செய்யுள் "வெண் கலிப்பா எனவும், அயற்றளையால் வந்த செய்யுள் கலிவெண் பா எனவும் இவர் உரையில் குறிப்பிடப் பெற்றுள்ளன. கலித்தளைதட்டுக் கலி யோசை தழுவி ஈற்றடி முச்சீரான் முடிவதனை வெண் கலிப்பா எனவும், வெண்டளை தட்டு வெள்ளோசை தழுவி ஒரு பொருள் மேல் வருவதனை கலிவெண்பா எனவும் பெயரிட்டு வழங்குவர் குணசாகரர்.* யாப்பருங்கல விருத்தியாசிரியரும், 'வெள்ளோசை யினால் வருவதனைக் கலிவெண்பா என்றும், பிற வற்றால் வருவனவற்றை வென கலிப்பா என்றும் வேறு படுத்திச் சொல்வாரும் உளர்.’’ என்று கூறுவர். மேற் கூறியவற்றைக் கூர்ந்து நோக்கின் வெண் டளையால் வந்ததனைக் கலிவெண்பா எனவும், பிற தளையால் வந்ததனைக் வெண் கலிப்பா எனவும் வழங்கும் பெயர் வழக்கே பொருத்தமுடையதெனத் தெரிகின்றது.

  • சுடர்தொடி கேளாய்” (கலி. குறிஞ்சி.15) என்ற பாடல் வெண் டளை தட்டு வெள்ளோசை தழுவி ஒரு பொருள்மேல் வந்த கலிவெண்பாவுக்கு எடுத்துக் காட்டு. மரையா மரல் கவர (கலி-6) என்ற பாடலும் வெண் டளையால் வந்த கலிவெண்பா ஆகும்.

34. செய்யு-நூற் (147) இன்உரை. 35. யாப்காரிகை-32 இன்உர.ை இ-3