பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 49 கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன் இன்றுநம் மானுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாயோ தோழி! பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்கு நம் மானுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாயோதோழி கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன் எல்லிநம் மானுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாயோ தோழி' இவை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை. வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை வான்மதி விடுத்தனை பல்லுயிர் ஒம்பினை நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம் இது தனியே வந்த ஆசிரியத் தாழிசை.

    2. ஆசிரியத் துறை : நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவனவும், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடை மடக்காய் வருவனவும், நான்கடியாய் இடையிடை குறைந்து வருவனவும் நான்கடியாய் இடை இடை குறைந்து இடை மடக்காய் வருவனவும் ஆசிரியத் துறை.

சீர்வரையறுத்திலாமையால் எனைத்துச் சீரானும் அடியானும் வரப்பெறும். முதலயலடி குறைந்தும், நடுவீரடி குறைந்தும் மிக்கும் வருவன ஆசிரியத் துறையாம். அல்லது ஒரடி குறைந்து வருவன. ஆசிரிய

                 3.                     
சிலப். ஆய்ச்சியர் குரவை-1,2,3

இ-4