பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. இலக்கிய வகையின் வளர்ச்சியும் குறித்த பொருளை முடித்தற்கு ஆகு-ம் ஏது நுதலிய முதுமொழி என்ப, 9 என்ற நூற்பாவால் குறிப்பிடுவர். (5) மந்திரம் : இதுவும் ஓர் இலக்கிய வகையாகும். இதனைத் தொல்காப்பியர், நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழிதான் மந்திரம் என்ப" என்று குறிப்பிடுவர். சொல் லி ய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயன்தரச் சொல்லும் ஆற்றலுடையாரே நிறைமொழி மாந்தர்' ஆவார். அஃதாவது இருவகைப் பற்றுகளையும் நீக்கி, ஐம்புலன்களையும் அடக்கி, எவ்வுயிர்க்கும் அருளுடையராய் வாழும் பெரியோர். ஆணையிற் கிளத்தலாவது, இஃது இவ்வாறு ஆகுக' எனத் தமது ஆற்றல் தோன்றச் சொல்லுதல். "மறை மொழி -புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லும் சொற்றொடர்' என்பது பேராசிரியரின் விளக்கம். எனவே, இவ்வாறு ஆகுக என்று தமது ஆணையால் சொல்லப் பெற்று, அவ்வாற்றலனைத்தையும் தன்கண் பொதிந்து வைத்துள்ள செறிவுடைய நன்மொழியே "மந்திரம' என்பது. திருமறைகள் பூசித்து முடிச் சென்றிருந்த திரு மறைக்காட்டுத் திருக்கோயிலின் திருக்கதவுகளைத் திறக்கப் பாடிய பண்ணினேன் மொழியா ளுமை' (5.10) என்ற அப்பர் தேவாரமும், அத்திருக்கதவுகளை மூடவும் திறக்கவும் பாடிய சசரம் மறை' (2.87) என்ற சம்பந்தர் தேவாரமும், சம்பந்தர் அப்பர் அருளிய 10. செய்யு - 170 (இளம்) 11. செய்யு - 171 (இளம்)