பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

影 72 இலக்கிய வகையின் வளர்ச்சியும் எழுத்தொடு சொல்லொடும் புணராதாகிப் பொருள்புறத் ததுவே குறிப்பு மொழி என்பே என்பது தொல்காப்பியம். கவியால் பொருள் தோன்றாது, பிள்னர் இன்னது இது எனக் குறிப் பினால் உய்த்துணர்ந்து சொல்ல வைத்தலின் இது 'குறிப்பு மொழி எனப்பட்டது. பாட்டிடைப் பொருள் பிறிதாகி அதனிடையே குறித்துக் கொண்டு உணரின் அல்லது இக்குறிப்பு புலனாகாது என்பதை உணர்த் தவே இதனைக் கூற்றிடை வைத்த குறிப்பு’ என்றார் ஆசிரியர். ஒருசார் ஆசிரியரால் இது பொருளிசை என்றும் வழங்கப் பெறும். இதற்கு, குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையின் அடக்கின மூக்கினராம்' என்ற எடுத்துக்காட்டு தருவர் பேராசிரியர். இதனுள் குடமே தலையாகப் பிரிந்தார் எனவும், கொம்பெழுந்த வாயினர் எனவும், கையுட் கொண்ட் மூக்கினர் எனவும் கூறியக்கால், எழுத்தும் சொல்லும் பொருளும் இயல்பிலவாதலும் குறிப்பினால் அதனைக் குஞ்சரம் எனக் கொண்டவாறும் கண்டு கொள்ளலாம். எனவே, மேற்கூறியவற்றால் அடி வரையறையில்லாதனவாகிய அறுவகைச் செய்யுள் களின் இயல்பு ஒருவாறு உணர்த்தப் பெற்றது. பண்ணத்தி : இவை தவிர பண்ணத்தி என்ற ஒருவகை இலக்கியத்தையும் குறிப்பிடுவர் தொல் காப்பியர். பண்ணத்தி என்பது, இசை நூலின் பாவின மாகும். பாட்டின் கண் கலந்த பொருளையுடையன வாகிப் பாட்டுகளின் இயல்புடையன பண்னத்தி' எனப்படும். 13. செய்யு - நூற். 172 (இளம்)