பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இலக்கிய வகையின் வளர்ச்சியும் வதற்கு ஏற்றதேயாகும். வழக்குரை காதையும் (சிலப் 20) அத்தகையதே. இனி சிலம்பில் 2,3,4,5,6,8, 10,11,13,14,15,16,22,25,26,27,28,30 எண்ணுள்ள காதைகள் (பதினெட்டும்) நிலை மண்டில ஆசிரியப் பாக்களாகும். எனவே, சிலப்பதிகாரம் பாவகையால் ஒவ்வொரு காதையும் தனித் தனிச் செய்யுளாக அமைந்து நிற்பதனைக் காண முடிகின்றது. இந்தப் போக்கு பண்டைய புலவர்களிடம் காணப்பெறுவது. ஆனால், இளங்கோவடிகள் தம் காவியத்தில் நாட்டுப் பாடல்களின் வடிவங்கள் பலவற்றையும் கையாண்டுள்ளதையும் காண முடிகின்றது. கான்ல் வரி' என்பது நெய்தல் பாட்டு. இங்குள்ள வரிப்பாட்டு மக்களைப் பழிச்சும் வரிப்பாட்டு. வரிப்பாடல்கள் ஏழு வகை என்று அரும்பதவுரைகாரர் குறிக்கின் றார். அவை ஆற்றுவரி, சார்த்துவரி, திணை நிலைவரி, மயங்குதினை நிலைவரி, முகமுடை வரி, முகமில்வரி, படைப்புவரிஎன்பனவாகும். ஆற்று வரிஎன்பது கானல் வரியில், திங்கள் மாலை வெண்குடையான் (பாடல்.2) என்ற பாடல் முதல் தொடர்ந்து வரும் இரண்டு பாடல் களும் (3,4) காவிரியைப் பாடுவதுபோல் ஆற்றைப் பாடுவதாகும். இவற்றைப் பாடியது கோவலன். 'பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரொடும் சார்த்திப் பாடின் சார்த்தெனப் படுமே” என்ற ஒரு நூற்பாவை எடுத்துக் காட்டி சார்த்து வரியை விளக்கு வர் அரும்பத உரைகாரர். கானல் வரியில் பாட்டுடைத் தலைவனாக வரும் சோழன் என்ற பெயரோடும் அவன் ஊராகிய புகாரோடும் சார்த்துவரி வருதல் காணலாம். வேட்டுவ வரி (சிலப். 12) ஊர் சூழ்வரி (சிலப். 19) என்பவை நாட்டுப் பாடலும் கூத்துமாக அமைவதைக் காணலாம். குன்றக் குரவை (சிலப். 24) ஆய்ச்சியர்