பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14

முன்னரே உரை நடை இலக்கியங்கள் சிறந்து விளங்கின. ஆனால், அவையெல்லாம் இப்போது அழிந்து விட்டன

என்றே கொள்ளுதல் வேண்டும். தம் விருப்பத்திற். குள்ளாகிய செய்யுள் இலக்கியங்களிலேயே எண்ணற்றன. வற்றை இழந்து விட்ட தமிழர், செய்யுள் இலக்கியங்கள் போல், தம் பாராட்டுதலைப் பெரும் அளவில் பெருத. உரை நடை இலக்கியங்களே இழந்து விட்டதில் வியப் பொன்றும் இல்லே என்க.

நமக்குக் கிடைத்துள்ள உரை நடை இலக்கியங்: களுள் கனி மிகப் பழமை வாய்ந்தன, இறையனர் களவியல்-உரையும், உரை நடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங்கப் பெறும் சிலப்பதிகாரத்தில் இடையிடையே வரும் உரைப் பாட்டு கடைகளுமேயாம் : அவை, இக்கால உரை நடைகள் போலாது, செய்யுள் களைப் போன்றே இன்னேசை அமைய ஆக்கப்

பெற்றுள்ளன ; இதோ அவற்றுள் சில வரிகள் :

" அரசன், இனி நாடு காடாயிற்ருகலின், நூல். வல்லரரைக் கொணர்க' என்று எல்லாப் பக்கமும் ஆட் போக்க, எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் வல்லா ரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம் என்று வந்தார். வர, அர்சனும் புடைபடக் கவன்று. என்ன எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட் டன்றே பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்' எனச்சொல்லா நிற்ப, . மதுரை ஆலவாயில் அழல் நிறக் கடவுள் சிந்திப்பான், என்ன பாவம் :

|