பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20காலம் ஒரு காலம். சொற்களை, இவ்வாறு வரிசை செய்து வழங்கல் இனிமையும் எளிமையும் உட்ைத்து என அறிந்து அதற்கேற்ப மாற்றி அமைத்து வழங்கிய காலம் ஒரு காலம்; இவ்வாறு படிப்படியே செப்பம் பல செய்யப் பெற்று வழங்குவதே இன்றைய மொழி, மொழி, இன். துள்ள நிலையினேப் பெறுவதற்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளேக் கடந்து, பலப் பல கிலேகளைத் தாண்டி வந்துள்ளது. மொழிகளின் பொதுப் பண்பு இது. இதை அறிவில் கிறுத்தி, நம் செந்தமிழ் மொழியின் தொன்மை யினைக் காணுதல் வேண்டும். - . . . . -

உலகில் மக்கட் பிறவி முதன் முதலாகத் தோன்றிய காலம், ஐந்நூருயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாம் என்றும், மக்கள் அவ்வளவு பழைய காலத்தில் பிறந்தவ ராயினும், அவர்கள் ஒரளவு நாகரிகம் உடையவராய் வாழத் தொடங்கிய காலம், ஐம்பதினுயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாம் என்றும், அம்மக்கள், ஒருவர் கருதி யதை ஒருவர் உணர உரைகளே மேற்கொண்டகாலம், ஏறக்குறைய முப்பத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாம் என்றும், பின்னர்ப் பேச்சொலிகள் மெல்ல மெல்லத் திருந்தியதற்குப் பல நூறு ஆண்டுகள் கழிந்திருக் கும் எள்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

தமிழ்மொழி இனிமை வாய்ந்தது என எல்லோரும் ஒப்பக் கூறுகின்றனர். அது. செந்தமிழ், தீந்தமிழ், தமிழ், எனும் இனிய தீஞ்சொல் என்றெல்லாம் பாராட்டப் பெறு கிறது. தமிழ் எனும் சொல்லே இனிமை எனும் பொருள் o தருவதாம். "தமிழ் தழீஇய சாயலவர்' என்ற சிந்தாமணிச்