பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

புலவர், அவ்வுள்ளமே தம் பாடற் பொருளாக, ஓர் அழகிய பாட்டொன்று ஆக்கி, அகமகிழ்ந்து அளித்துச் சென்றுளார்.

“சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுளனோ எனவினவுதி; என்மகன்
யாண்டுளனாயினும் அறியேன்; ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறும் இதுவே;
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே!”

—புறம்.86

நாடு காவல் குறித்து வளர்த்த வீரம். நாட்கள் செல்லச் செல்ல, நாட்டழிவிற்கே காரணமாய் மாறிவிட்டது. நாளடைவில் புறப்பகை மறைந்து விட்டது. அதனால் அவரோடு மேற்கொண்ட போர்களும் இல்லாயின. ஆயினும், போர் மறவர் குடியிற் பிறந்து போர் அன்றி வேறு எதுவும் அறியாது. வாழ்ந்து வந்த வீரர்கள் தம் போர்வேட்கையைத் தணித்தல் அறியாயினர். மேலும், தமிழகத்தில் அரசோச்சி வாழ்ந்த அரசர்களும், புறப்பகையாய பொதுப்பகை இல்லாகவே, தம்முள்ளே ஒருவரோடொருவர் பகைகொண்டு வாழலாயினர்; ஆனால், தமிழகத்தின் எல்லைக்கண் நிகழ்ந்த போர்கள், தமிழகத்தின் அக நாடுகளிலெல்லாம் நடைபெறலாயின. பேராசர்கள், சிற்றரசுகளை அழிப்பதையும், கிற்றரசர் பலர் கூடிப் பேரரசினை அழிப்பதையும் மேற்கொண்டனர்; அரசுகளை அழிப்பதோடு நில்லாது. அவ்வரசுகளுக்குரிய நாடுகளையும் அழித்தனர். அதனால் தமிழ்நாடு பேரழிவிற்குள்ளாயிற்று: