பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

மக்கள் சமய நெறி நின்றால் மட்டுமே மக்கட் பண்பு வாய்க்கப் பெறுவர் என்பது இல்லை; மேலும், சமய நெறி நின்றவர் அவ்வாறு நின்றமையினாலேயே மக்கட் பண்புடையவராகி விடுவதும் இல்லை. சமய நெறி நின்றவரிடத்தும், தக்க இன்ன தகாதன இன்ன என அறியும் அவ்வறிவு நில்லாது நீங்கிவிடின், அந்நிலையில், அச்சமயச் சார்பால் பயன் இன்றாம்; சமயமும் தன் குறிக்கோள் இழந்து குன்றும். சமய நெறியினைச் சாராது தனித்து நின்றோராயினும், அச்சமய நெறியினைச் சார்ந்து நின்றோராயினும், உள்ளம், உரை உடல்களால் தூய்மை உடையார் மட்டுமே உயர்ந்தோராவர்; அவற்றில் தூய்மை குன்றுவார், எந்நிலை நின்றோராயினும் இழிந்தோராவர்; ஆக, மக்கட் பண்பாட்டிற்கு அடிப்படையாவன இவையே. இவற்றைப் பெறத் துணை புரிவனவற்றுள், சமயமும் ஒன்று ஆகவே, மக்களை மக்கட் பண்புடையவராக்கும் பணியினைச் சமயச் சார்பின்றியும் ஆற்றுதல் இயலும் என்பது உறுதியாம்.

இந்த உண்மையினை உணர்ந்த பெரியோர்கள் பலர் தமிழகத்தில் சைவமும், வைஷ்ணமும், பௌத்தமும், சமணமும் தம் தம் ஆட்சி செலுத்த முனைந்த அந்தக் காலத்திலேயே வாழ்ந்து வந்தனர். அவர்கள் அச்சமயங்கள் கூறும் கோட்பாடுகளுள் ஒன்றற்கொன்று முரண்பட்டன வாய், ஒன்றை யொன்று பழித்து உறுபயன் தாராதனவாய்க் காணப்பெற்றனவற்றை விடுத்தும், அவற்றுள் நல்லன எல்லாவற்றையும் கொண்டும். அவைகளாலும் கூறப் பெறாதன சிலவற்றைக் கூட்டியும், அக்கொள்கைகள் அனைத்