பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசனம்

மனித ஜீவிதத்தில் உயிர் வாழ்க்கை என்பது கலையைவிட, பிரதானத்துவம் பெறும் பெwழுது ஒரு நாட்டின் வசனச் செல்வம் அந்நாட்டுக் கவிதைகளைவிட, முக்கியத்துவம் பெற்று விடுகிறது என்று ஆங்கில இலக் கியச் சரித ஆராய்ச்சியாளனாள் ஐபர் எவான்ஸ் {for Evens) கூறுகிறான்.

ஒரு நாட்டின் தன்மைகளைப் பலவாறாகப் பிரித்துப் பார்க்கலாம். அந்நாட்டின் இலக்கிய வளர்ச்சி, கலை வளர்ச்சி, நீதிநெறி முறைகள், சரித்திரப்பாதை பூகோள வசதியின் குறை நிறைகள், தத்துவ வளர்ச்சி, ஆஸ்திக நாஸ்திகப் பண்புகள் என்று பலவாறாகப் பிரித்துப் பார்க்க முடி யும். இவற்றில் கலை, இலக்கியம் முதலிய பண்புகளின் சாதனைகளைத் தெரிந்துகொள்ள, அந்நாட்டுக் கவிதைகளுக்குப் பிரதானத்துவம் கொடுத்து விளக்க முயலலாம். ஏனெனில் கலையம்சத்துக்கு இலக்கிய வகையில் தலை சிறந்து நிற்பது அந்நாட்டுக் கவிதைகளாய்த் தானிருக்கமுடியும், கவிஞர்களின் அசுர சாதனைகள் அந் நாட்டுக் கலையின் உயர்வை மட்டுமே அளக்க உதவும் அளவுகோலாகப் பயன்படலாம். ஏனெனில், கதை, கவிதை, நாடகம் முதலிய இலக்கிய சிருஷ்டிகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட மன அவசத்துக்கு வக்காலத்து வாங்கிப்

11: