பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம் நேடியவர்களும் தொண்டர் நாதனைத் தூது விட்டதையும். முதலையுண்ட பாலனை அழைத்ததையும்தான் மதிப்பீடுகளாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். தமிழுக்கு தமிழுக்குப் பெருமை தேட இவைதானா வேண்டும்? உலகத்து ஆதி மொழி ஐத்தனுள், இன்றும் தமிழ் ஒன்று மட்டுமே வழக்கொழித்து சாகாமலிருக்கிறதே. அது போதாதா? தமிழ் ஏன் சாகவில்லை என்பதை உணர்ந்து கொண்டால், தமிழையே நாம் உணர்ந்து கொள்ளமுடியும். ஆனால் நம்மில் பலர் அதைத்தான் செய்வதில்லை. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று நொன்னால், அதைப்பற்றி அக்கறையே கொள்லதில்லை. ஒருவன் சரி, இருக்கட்டும். கம்பராமாயணத்தைப் பார்ப்போம். எத்தனைபேர் கம்பனுக்கு கொள்ளிவைக்கப் பார்த்தாலும், யாராரோ பாடல்களை 'உருவுவதும், சொருகு வதுமாய் இருத்தாலும், கம்பன் சிரஞ்சீவியாய் வாழ்வான் என் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த நம்பிக்கை தமக்கும் ஒன் ஏற்படுகிறது என்பதை எத்தனைபேர் சிந்திக் தினார்கள்? இன்றும் கம்பராமாயணம் ராம பஜனை செய் வதற்கும், நூல் போட்டுப் பார்ப்பதற்கும் உபயோகப் படுகிறது. கம்பன் வாழ்வது ராம பஜனையாலா? ராம் பஜனை காலப்போக்கில் காலாவதி ஆகிவிடும். அத்தோடு கம்பனும் மறைந்துவிடுவானா? மாட்டான். காரணம், அவன் களிதன். வெர்ஜில், ஹோமர், தாந்தே, ஷேக்ஸ் பியர், மில்டன் முதலியவர்களை யெல்லாம் அறிந்துவிட்டு, "நமது கம்பன் அவர்களுக்கெல்லாம் மேலானவன்' என்று வ.வெ.சு.அய்யர் மதிப்பிடும்போதுதான், கம்பனுடைய ஜீவரகசியம் வெளியாகிறது. 10