பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம் வ.வெ.சு.அய்யருக்கு முன் நாம் இந்தக் காரணத் தைத் தெரியாமலா இருந்தோம்? அதற்குமுன் நம் தமிழ்ப் பண்டிதர்கள் என்ன செய்து வந்தார்கள்? ** கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்" என்ற ஒரு அடியை வைத்துக்கொண்டு, ஒன்பது மணி நேரம் ஆஹா ஓஹோ வென்று வெறும் வாய்ப் பந்தல் போட்டுக் கொண்டிருந் தார்கள். 'எண்ணிலா வருந்தவத்தோன்' என்று கம்பன் விசுவாமித்திரரைக் குறித்ததை வைத்துக்கொண்டு, எண் ணில் ஆ வரும் தவத்தோன்' (நினைத்தால் காமதேனுவை யும் கொண்டுவரும் தபசி.) எண் இல் ஆ வருந்தவத் தோன் (எண்ணில்லாத காமதேனுக்களையும் வரும்படிச் செய்யும் வல்லமை பெற்றவன்) என்றெல்லாம் வலிந்து பொருள்கொண்டு, கழைக் கூத்தாடும் புலவர்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள். இந்த முறை வியாக்கியானங் கள் விம்ர்சனமாகிவிடுமா? முடியாது. தாமம் செப்பாது, கண்டதை மொழிவதுதான் விமர் சனம். காமம் செப்புவது சுலபம்: கண்டது மொழிமோ என்றல் அதுதான கஷ்டமான காரியம். ஏனெனில், இலக்கியம் அப்படிப்பட்ட விஷயம். புத்தகங்களைப் படிக்கும்போது இன்பம் அனுபவிக்கிறோம். ஆனால் சமயங்களில் அவை நமது உணர்ச்சிகளையே பாதித்துவிடுகின்றன. காரணம் எல்லா இலக்கியங்களும் ஏதேனும் ஒரு வகையில், நம்வாழ்க்கையை ஒட்டியது தான். வாழ்க்கை என்பதுதான் என்ன ? உலகத்துச் சூழ்நிலையின் இன்ப துன்பங்களை, குரூர வசீகரங்களைக் கண்டும், கேட்டும், பிரக்ஞை தவறாது, நிர்ப்பந்தத்தால் அதனோடு ஒட்டிப் பழகுவதுதானே? இலக்கியம் வாழ்க்கை உண்மையைக் காட்டுகிறது. வாழ்க்கை என்பது நாம் 11