பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

குசிகர் குட்டிக் கதைகளும். இந்த 'மறுமலர்ச்சியில் மாதலை யாவுக்குத்தான் முதற் பங்கு உண்டு. அடுத்தாற் போல், $x"ஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரமும், மாயூரம் 2. வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம், பெண் மதிமாலை, சுகுணசுந்தரி முதலிய நூல்களும் தெளிந்து, எளிய நடையில் வார' ஆரம்பித்த தமிழ் வசன நடையின் புத்துயிருக்கு நல்ல எடுத்துக் காட்டாகவே விளங்கின. இதன் பின்னர் தான் தமிழில் வசன நூல்கள் பல்கிப் பெருகுவதாயிற்று. பூலோக விநோதக் கதைகள், குடும்ப விநோதக் கதைகள் முதலிய பெரும் வசன நூல்கள் தமிழில் உருவாகி வெளிவந்தன. இந்த வசன நூல்களைத் தமிழ் வசனச் செழுமைக்கு ஒரு ஓத்துக் காட்டாகக் கூற முடியாதென்றாலும், வசன வளர்ச்சிக்கு இவைகளும் ஒரு படி என்றே கொள்ள வேண்டும். பின்னர் பண்டிதர் குழாத்திடை யிருந்தும் சில வசன கர்த்தாக்கள் தோன்றினர். அவர்களில், நல்ல தமிழில் தெளிவான அபிப்பிராயங்களை வெளியிட்டவர் களில் தி. செல்வ கேசவராய முதலியாரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மேலும் தமிழ் நூலுக்கு உரை செய்தும், பதிப்யீத்தும் தமிழைக் காப்பாற்ற முனைந்தவர்களில் ச. சிவானந்தம் பிள்ளையையும், உ. வே. சாமிநாத ஐயரையும் குறிப்பிட முடியும்.

ஆங்கிலேயரின் பிரவேசத்துக்கும் பின்பு ஆங்கில ஞானம் பெற்று வசன நடை எழுதிய வசன கர்த்தாக்கள் செல்லாகி, ராஜ வாழ்த்துப் பாடியவர்கள் மறைந்து தமிழில் சுதேசிய உணர்ச்சியோடு. தமிழ் நூல்கள் சிருஷ்டிக்க முனைந்தவர்களைக் குறிப்பிட வேண்டும். ஸ்ரீமதி அன்னி பெஸண்டின் ஹோம் ரூல் இயக்கம், டாக்டர் ஆனந்த

124