பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசனம்

குமாரசாமியின் சுதேசியக் கலைப்பணி, மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் முதலியன தமிழில் மேலும் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்குவதற்கு ஏதுவாய் விளங்கின. இதன் விளைவாக, தமிழருக்கு ஒரு நல்ல கலிஞகுக் (பாரதியும்) ஒரு நல்ல விமர்சகரும் (

a - வெ, சு. அய்யர்) கிடைத்தார்கள், பாரதியின் வசன நடையைக் கவனித் தோமானால், இரண்டு விஷயங்கள் புலனாக முடியும். அன்றாட அவசரத்துக்காக, பத்திரிகைகளில் பாரதி எழுதிவந்த அரசியல் சமூகக் கட்டுரைகள் ஒரு தனி வார்ப்பு; ஆத்ம திருப்திக்காக, இலக்கியச் சுவையோடு எழுதிய ஞான ரதம், சந்திரிகையின் கதை முதலிய வசன நூல்கள் வேறொரு வார்ப்பு. பாரதியின் வட மொழிச் சொல்லாட்சி வசனத்தின் போக்குக்கு ஒரு காம்பீரியாத் அளித்தாலும், பல இடங்களில் மணிப் பிரவாளமாய் தமிழின் வலுவைக் குறைத்துக் காட்டுகின்றது. பின் கூறிய ஞானரதமும் சந்திரிகையின் கதையும் பாரதியின் வசன சாதனைக்கு நல்ல எடுத்துக்காட்டு,

இருபதாம் நூற்றாண்டின் தேசிய இயக்கம் எழுத் தாளர்களுக்கு, ' ஜன சமூகத்துக்கு புரியும் தன்மையில் பாஷையைத் ' கையாள வேண்டிய நிர்ப்பந்தத்தையும் சந்தர்ப்பத்தையும் தேடித்தந்தது. பத்திரிகைகளின் அவசர யுகவேகத்துக்கு உட்பட்டு, வாய்மொழி போகச் சொல்ல வேண்டிய விஷயங்களை நேரடியாக, நல்ல தமிழில் எழுதி னார்கள். மக்கள் சமூகத்தில் பெரும்பாலோர் இலக்கியக் கல்வி பெறுவதற்கும் அரசியல் கல்வி பெறுவதற்கும் இசைவாகப் பல தமிழ் எழுத்தாளர்கள் தோன்றினார்கள். இந்த எழுத்தாளர்களில் இன்றைய வசனத்துக்குப் பிரதான களாகக் கருதப்படுபவர்கள் ஒரு சிலரே. திருவாரூர்கன்

125