பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

எனினும் * கல்கி' பெருமைப்படக்கூடிய ஒரு விஷயம் உண்டு. எப்படி ஆரணி குப்புசாமி முதலியாரும் ஜே. ஆர். ரங்கராஜுவும் தமிழில் பாமர ரஞ்சகமான நாவல்களை எழுதி, தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான தமிழ் வாச கர்களை உண்டாக்கினார்களோ, அதுபோலவே கல்கியும் அவர்கள் செய்த திருப்பணியையே, கொஞ்சம் நாசூக்காகப் புதிய மோஸ்தரில் அவர்களைவிடச் சிறந்த தமிழில் செய் தாம் என்றே சொல்லலாம். * கல்கி 'யின் “ ஆனந்தவிகடன்' சேலை தமிழ் நாட்டில் எத்தனையோ ஸ்திரீ புருஷ வாசகர் களை-சிந்தனைக்கு அதிகமாக வேலை கொடுக்காத சர்வஜன ரஞ்சகமான வாசகர் கூட்டத்தை உண்டாக்கிவிட்டது என்பதை மறுக்க முடியாது.

இலக்கிய உலகின் பிரபலஸ்தர்களான இந்த . வசன கர்த்தாக்களைத் தவிரத் தமிழில் அரசியலின் மூலமாக நல்ல வசனத்தைத் தருபவர்களில் மூவரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும் : டி. எஸ். சொக்கலிங்கம், வெ. சாமிநாத சர்மா, ஆ. தா, சிவ ராமன். திரு. டி. எஸ். சொக்கலிங்கத்தின் சொல்லாட்சி வைரம் பாய்ந்ததாகவும் கூரியதாகவும் இருந்தது, வெ. சாமிநாத சர்மாவும், ஆ , நா. சிவராமனும் தமிழுக்கே புதிதான அரசியல் விஷயங்களைத் தெள்ளத் தெளிந்த முறையில், அலங்காரமற்ற எளிய தமிழ் வசனத் தில் தந்திருக்கிறார்கள், .

இவர்களைத் தவிரத் தமிழ் நாட்டில் வேறு நல்ல வசன கர்த்தாக்களே கிடையாது என்று சொல்லிவிட முடியாது. இந்தப் பிரபலஸ் தர்களின் குறைநிறைகளைப் போலவே, வசன ' நநடை எழுதும் பல ஆசிரியர்கள் இருக்கவே செய் கிறார்கள், அவர்களை யெல்லாம் தேடிப் பிடித்துப் பட்டியல்.

128