பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசனம்

தயாரிப்பதைவிட, தமிழ் வசன நடை எப்படி இருக்க வேண்டும், என்ற விஷயங்களை ஆராய்ந்து ஓரளவு தெளிவு பெற்றுக் கொண்டால், யாரையும் அனந்து எடை போடுவ தற்குச் செளகரியமாயிருக்கும்.

தமிழை எப்படி எழுத வேண்டும்? இதைப்பற்றிப் பல வாதப் பிரதி வாதங்கள், தமிழை இன்று வழக்கிலுள்ள பேச்சு முறையிலேயே எழுதவேண்டும் என்பது. என் கடசி. பேச்சு முறை என்பது இன்றுள்ள கொச்சை முறை அல்ல, பேச்சு நடையில், அநாவசியமான வார்த்தை அலங்கார மில்லாமல், கொச்சையை விலக்கி, இலக்கணத்துக்குத் தன் வணங்கி அடிமையாகாமல், விஷயத்தைத் தெரிவரக்கும் முறையில், வார்த்தைகளின் வலு. ஸ்தானம், அர்த்தம் இவற்றை உணர்ந்து எழுதவேண்டும் என்பதே அர்த்தம்.

இன்று தமிழ் வசனம் எழுதுபவர்களில் பெரும் பாலோர் வார்த்தைகளைக் கொட்டி, பக்கத்தை நிரப்பும் கூட்டமாகவே இருக்கிறார்கள் என்பது என் எண்ணம் இப்படி இவர்கள் பாஷையைத் துர்விநியோகம் செய்வதால் பாஷை நாளடைவில் மலினப்பட்டுச் சீரழிந்து போகும் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

வார்த்தைகள் மொழிவழக்கில் அதுவாகவே அமைந்து கிடந்த போதிலும், ஒரு எழுத்தாளன் அவற்றின் மூலம் தனக்கே உரிய ஒரு அகராதியைத் தயாரித்து விடுகிறான்" என்கிறார் ஒரு ஆசிரியர். கலைஞன் என்பவன் அகராதியி லுள்ள அத்தனை வார்த்தைகளையும் தலைகீழ்ப் பாடமாய்ப் படித்தவன் என்பதல்ல. அவனுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வார்த்தைகள் தான் தெரிந்திருக்கும், நமக்குத் தெரிந்திருப்பதைவிட, அவனுக்குத் தெரிந்த வார்த்தைகள்

123