பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம் விரும்புவதும், ஒப்புக்கொள்ளுவதும் மட்டுமே நல்ல வையா? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்து கொண்டால், இலக்கிய விமர்சனத்தைச் சுளுவில் புரிந்துகொள்ள முடியும். எல்லோரும் ஒன்றையே விரும்ப முடியாது. ஒவ் வொருவருக்கும் இலக்கியம் தமது விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாகவே இருக்கவேண்டும் என்று எண்ணம். நவ ரசங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று ஒத்துப் போகும். இந்த விருப்பம் வாசகன் அளவில் இருந்தால், நல்லது. சிறந்த வாசகன் ஒருவன்தான் கதாசிரியனைப் பார்த்து, உனக்குப் பிடித்ததாய், உன் கருத்துக்கு ஒத்த தாய், உனது நல்ல சிருஷ்டி யொன்றை எந்த முறையிலே னும் எனக்குத்தா" என்று கேட்க முடியும். விமர்சகன் அப்படிப்பட்ட வாசகனாய்த்தானிருக்கவேண்டும். உதா ணமாக, ஒரு ஆசிரியன் கடை கெட்ட விபசாரி ஒருத்தி யின் காம லீலைகளைப்பற்றி எழுதுகிறான் என்ருல், அதைப் படிக்கும் விமர்சகனுக்கு அம்மாதிரி விஷயங்கள் பிடிக்கவில்லை யென்றாலும், உடனே அதை ஆபாசம்! அசிங்கம்!" என்றெல்லாம் திட்டுவதில் பிரயோஜனமில்லை. அந்த நூலினால் சமூகமே பாழ்பட்டுவிட்டது என்று கத்து வதில் அர்த்தமில்லை. "இலக்கியத்தில் பத்தினி இலக்கியமும் பரத்தை இலக்கியமும் கிடையாது. நல்லவை, மோசமான வைதான் உண்டு" என்று ஆஸ்கார் ஒயில்டு எழுதிவைத் திருக்கிறான். ஆகவே, ஆசிரியன் தான் எடுத்துக்கொண்ட கருமத்தில் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறாள் அல் லது தவறி இருக்கிறன் என்பதைக் கொண்டே, அந்த நூலின் மேன்மை, தாழ்மையை நாணயிக்க வேண்டும். அது போலவே ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங் உண்மையெனக் கருதி, அதற்கு அப்பாற்பட்ட களையே 15