பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம் வெறுப்புக்களை மனசில் கொண்டு நூலாசிரியனைத் தாக்கும் கீழ்த்தர மனோபாவம் மறைய வேண்டும். ஆங்கிலத்தில் விமர்சனங்களுக்கென்றே தனிப் பத்தி ரிகைகள் வெளிவருகின்றன. Saturday Review of Literature என்ற விமர்சனப் பத்திரிகையில் வெளிவரும் புத்தக விமர்சனங்களைப் படித்தால் ஒரு நூவைப்பற்றி ஒரு வாசகன் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமோ, அத்தனை யையும் தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழிலும் அது போல, ஒரு விமர்சனப் பத்திரிகை வரவேண்டும். ஆந்தந்த மாதம் வெளிவரும் நூல்களைப்பற்றி, அந்தந்தத் துறையில் கைவந்த, பாரபட்சமற்ற விமர்சகர்களைக் கொண்டு, மதிப் புரைகள் எழுதி, அதைப் புத்தகமாகவே வெளியிடலாம். மேலும், அச்சில் இருக்கும் நூல்களைப்பற்றிய விவரங்களும், விமர்சனங்களும், பகுதிகளும் தரலாம். இப்படியெல்லாம் உருப்படியாய்ப் வாசகர்களுக்கு பதிப்பாளர்கள்மீதும், பண்ணினால்தான் ஆசிரியர்கள் மீதும் உள்ள அவநம்பிக்கையும் மறைய முடியும். தமிழ் நிலத்தில் ஆர்வத்தால் எழுந்து பயனற்று விளைந்து வரும் காளான்களையும், களைகளையம் அப்போதுதான் விலக்க முடியும். விமர்சகர்களும். விமர்சனமும் இன்றைய இலக்கிய வளர்ச்சியின் மீது ஏற்பட்ட கரிசனை மட்டுமல்ல; இன் றையத் தேவை, 21