பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கலைமரபும்

விவகாரத்தை முடிவு பண்ணலாம். அவை கலைகள் என்று நாம் ஏன் சொல்லுகிறோம் என்று கேட்டால், மீண்டும் கலைக்கு, புதுக் கோணத்திலிருந்து விளக்கம் சொல்ல வேண்டி நேர்கிறது. அவை நமது

- இத. உணர்ச்சியை எப்படியோ தொடுகின்றன. பாதிக்கின்றன. உலுப்பு கின்றன. ஆதலால், நாம் தலையை ஆட்டுகிறோம்.

அப்படி பா னால் இதய உணர்ச்சிக்கு இன்பம் அளிப் பவை எல்லாம் கலையாகிவிடுமா ?

தேனருவி மின்னலைச் சரடு பின்னி விட்டதுபோல், பாய்ந்து விழுவதைக் காண்கிருேம், ஆயிரம் தலை தூக்கிச் சீ றிவரும் நாகேந்திரனைப்போல், திருச்செந்தூரிலே கடல் பொங்கிக் குமுறிவந்து, அவை வீசுவதைக் கண்டிருக்கிறோம். சோலையில் அன்றலர்ந்த ரோஜாப்பூ மணம் பரப்பி அழகு தருவதை ரசிக்கிறோம். வானவில் சப்த வர்ண ஜாலங் காட்டி , வானில் படர்வதைக் கண்டு மயங்குகிறோம். இவை நமது இதயத்தின் அழகுணர்ச்சியைத் தட்டிக் கொடுத்து இன்பத் தருகின்றன. நெஞ்சில் ஒரு திறைவையம். இனிமைuை! aம் பொழிகின்றன.

இவைகள் கலைகளா? இந்தக் கேள்வி நம்மைத் திடுக் கிட வைக்கிறது, ஒரே வார்த்தையில் அவை கலைகளில்லை என்று யாரும் சொல்லிவிடலாம். காரணம் கூறும்போது, கலையின் அம்சம் தானாகவே வெளிப்பட்டு விடுகிறது.

தேனருவி கலை tu.ல்ல. ஆனால், தேனருவித் திரை யெழும்பி வானின் வழி ஒழுகும். செங்கதிரோன் பரிக்கா லும் தேர்க்காலும் வழுகும் என்று திரிகூட ராசப்பன் பாடி ய து கலை. வானவில் கலையாக முடியாது: நமது பெண்கள் கட்டும் வர்ணச் சேலைதான் கலையாக முடியும்.