பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம் சோஜா மணம் கலையாக முடியாது; அதிலிருந்து அத்தர் எடுப்பதுதான் கலையாகும். வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுவது ஹாஸ்யமாகிவிடாது; மாலி போன்ற சித்திரக் ரன் அதைச் சித்தரிக்கும்போது, அது நம்மில் சிரிப்பை ஊட்டும் கலையாகிவிடுகிறது. அப்படியானால். அந்தக் கேள்விக்கு வருவோம். இணைகளை என் கலைகள் என்கிறோம்? ஒன்றுமட்டும் புரிகிறது. அத்தர், மாலியின் சித்திரம், குற்றாலக் குறவஞ்சி, வர்ணச் சேலை இவையெல்லாம் மனிதன் படைத்தவை. மனித உள்ளத்தில் பட்டதை உருவாக்கியதீன் விளைவுகள். அனுபவத்தின் வெளியீடு. சரி. அப்படியானால், னிதன் உண்டாக்கியவை கலை தன் அது நனி மனித உள்ளத்திலோ, சமூகத்தின் உள் ளத்திலோ கருவுற்று உருவாகிப் பிறப்பது. ஆதலால், ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். மனிதனுடைய சிருஷ்டி அல் லாதவை கலை அல்ல, தீர் வீழ்ச்சியும், கடலும் கலையல்ல. கவிஞலும், கலைஞனும் காட்டும் உருவெளித் தோற்றங்கள் தான் கலைகள். கவிஞன் வாட்டும் அருளியிலே, நாம் உடல் தனையாமல் குளிக்கலாம்; அவன் தீட்டும் ரோஜா மலரை, இலதோஷத்திலும் கூட முகரலாம். அதாவது, கலைஞன் தான் அனுபவித்தவற்றை ஏதே னும் ஒரு சாதனம் மூலம் படைக்கிறான். அதுவே கலை. மனித சித்தனையின் பரிணாமமே கலை. சிந்தனைதான் கலையின் ஜீவாதாரமா? அப்படியானால், நாழும்தான் சித்திக்கிறோம். குற்றாலக் குறவஞ்சி ஆசிரி யர்: தேனருவியை எப்படிப் பார்த்தாரோ, அப்படியே 24