பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கலையும் கலைமரபும் நாமும் பார்க்கிறோம். ரசிக்கிகுேம். நாம் கலைஞர்களா? இல்லை. ஏனெனில் கலையைப் படைப்பதற்கு, சிந்தனை ஒன்று மட்டும் போதாது. அதை வெளியிடவும் தெரிய வேண்டும். இல்லையெனில் நக்கீரன் சொல்லைக் கேட்ட ருத்திரசன்மனைப்போல, நாம் எத்தனை ரசிகனாயிருந்தாலும் ஊமையாய் உள்ளுக்குள்ளே மருகிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். கூலைநன் என்றால் கற்பனையும் அவனுக்குச் சிந்தனா சக்தியும். மட்டும் போதாது; அதை ஒரு சாதனம் மூலம் உருவாக்கவும் தெரியவேண்டும். எத்தனையோ உள்ளங்களில் தாறு மாரும் உலைந்து கிடக்கும் எண்ணங்களை. கலைஞன் ஒ ஒழுங்கு செய்து, அவற்றை வெளியிலும் கொண்டுவந்து. விடுகிறான். நமது மனசிலே கிடந்து கிடந்து வெளிவர் முடியாமல் புழுங்கித் தவிக்கும் இன்பத்தை. வேதனைவை கவிஞன் கற்பிதம் பண்ணி எழுதிவிட்டால், நாம் ஒரு நிவர்த்தி கண்டு துள்ளுகிறேம். சோகத்தை வெளியிட முடியாத பெண்ணுக்கு ஒப்பாரி இம்மாதிரி நிவர்த்தியைத் தான் தருகிறது.

ஆகவே. கலையைப் படைப்பதற்குச் சிந்தனை மட்டும் போதாது; அதை வெளியிடவும் தெரியவேண்டும். கற் பனையும், சிருஷ்டி சக்தியும் கூடிப் பிறக்கும் குழந்தை தான் சுலையாயிருக்க முடியும்.

சிந்தனையை உருவாக்குவதுதான் கலை என்று ஏற்றுக் கொள்வோம். ஆனால், கலைஞன் என்பவன் சிந்திப்பன வற்றை அப்படியே உருவாக்கிவிட முடியுமா? கலைஞனுக்கு மனக் கண்ணும். புலன்களும் உண்டு. தியாகையர் 25 மனக் காதும், மனப் கீர்த்தியை முதன்