பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கலைமரபும்

நிழலையும் நம்மால் கொண்டுவர முடியாதென்பதில்லை. நம்முடைய கலைஞர்கள் சிலந்தி வலையைப்போல் மெல்லிய கோடுகளை இழுப்பவர்கள் ; சிகரெட் புகையைப்போல் அத்தனை மங்கிய ஒளி-- நிழல் சேர்க்கையையும் கொண்டு வரக்கூடிய திறமை பெற்றவர்களே, எளினும், ஒளியும் நிழலும் சந்தர்ப்ப விசேஷங்களால் நேரும் உருவத் தோற் றங்கள் என்ற காரணத்தால் அதாவது நிலையற்றவை என்ற காரணத்தால், அதற்கு முக்கியத்துவமே கொடுக்க வில்லை ,

மேல் நாட்டார் கண் கண்டவற்றைச் சமைப்பார்கள், அவர்களால் அந்தப் பொருளின் குண லக்ஷணத்தையும் உருவகப்படுத்தி வடிக்க முடியாது ; தெரியாது. நம்மவ ருக்கோ ஒரு பொருளைக் கண்டால் அல்லது கற்பித்தால் அதை மனசிலே போட்டுச் செமிக்க வைத்து, பிறகு அதைத் தம் வழியிலே சொல்லத்தான் தெரியும், மேல் நாட்டுக் கலைகள் எல்லாம் பிரகிருதியோடு ஒட்டியவை : அதற்குமேல் உயராதவை, இயற்கையின் வெறும் நகங்கள், நம்மவருக்கோ எல்லாமே ஒரு குறிப்பிட்ட விதிப்படி, கோலப்படி நடக்கிறது என்ற நம்பிக்கை. நம்மவர் களுக்கு அன்னப் பறவையும், யாளியும், குறிப்பிட்ட லக்ஷணங்களோடுதான் தெரியும். அதனால்தான், அவர்கள் அன்னத்தையும், யாளியை யும் இயற்கைக்கு மாறுபட்டுக் கற்பித்திருக்கிறார்கள். கடற்கரையில் ஈர மணலில் வளை தேடித்திரியும் நண்டு வகுத்த கோடுகளும், புரதம் காட்டும் பஞ்சாட்சரக் கோலமாகவே படும், அதனால் தான் நம்முடைய கலைகளில் செடி கொடிகளெல்லாம் கணிதம் வகுத்து வைத்த கட்டங்களுக்குள்ளே குறிப் பிட்ட நெளிவு சுழிவு களுடன் படர்ந்து செல்லும்,

37