பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம் இதனால் கீழ்நாட்டுக் கலைஞன் இயற்கையை மேல் நாட்டான் போல, கண்ணை அகலத் திறந்து வைத்துக் கொண்டு பார்க்கவில்லை எனச் சொல்ல முடியாது. உண். மையில் கீழ்நாட்டான்தான் இயற்கையை ஆழ்ந்து நோக்கு கிறான். இயற்கையின் நியதியைக் கண்டு பிடித்து, அதைத்: தனது கலையில் உருவாக்க முயல்கிறான்.

அதாவது மேல்திசைக் கலை இயற்கையை அப்படியே மொழி பெயர்க்க' எண்ணுகிறது. நமது கலை இயற்கை எ தழுவி, தனது இதய பாவத்தையும் கலந்து தரு கிறது. மேல் நாட்டார் தமது கலையில் ஜீவனை மட்டுமே கொண்டு வருகிருர்கள். நம் நாட்டார் ஜீவனைக் கொண்டு. வருவதோடு மட்டுமின்றி, அதில் இதயத்தையும் படைப்ப தற்காக இயற்கையைத் தம்முடையதாக்குகிறார்கள். அதாவது, புறத் தோற்றத்தின் அமைப்பை அப்படியே மேல் நாட்டார் சமைக்கிறார்கள். கீழ் நாட்டார் அகத் தோற்றத்தின் பாவத்தைத் தெரிவிக்க, உறுப்பமைப்புக் களில் அதீதத் தன்மை கொடுத்து இதயப் பண்பை வலி யுறுத்துகிறார்கள்.

ஆகவே, கீழ்த்திசைக் கலை நிரந்தரமானதாகவும், ஸ்திரமானதாகவும் இருக்கிறது. கீழ்த்திசைக் கலையில் மேல் திசைக் கலையைப்போல் 'பரிணாம விதியோடு ஒட்டிய வளர்ச்சி* என்பதைக் காண முடியாது. காலத்தோடு வளர்வதல்ல, அது காலத்தை மிஞ்சி, நிற்கிறது. அதனால் தான் கீழ்நாட்டுக் கலைஞன் இயற்கையைக் காப்பியடிப்ப தில்லை. இயற்கை அன்று கண்டதுபோல் என்றும் இருப்ப தில்லை. ஆகவே அவன் காலத்தைக் கடந்து, விலகி நிற்கிறான். அதனால்தான் நமது கலைப்பண்பும் அன்றிருந்த மேனி அழியாமல் இருக்கிறது. 28