பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கலைமரபும்

மேல் நாட்டார் தமது கலையை இயற்கையோடு ஒட் டியே வளர்த்து வந்தார்கள் ; வருகிறார்கள். எனினும், அந்த வளர்ச்சியில் இப்போது புதுப்புதுக் கிளைகள் வந் திருக்கின்றன. இயற்கையை அப்படியே காப்பியடிப்பதை விட்டு விட்டு, சூஷ்மமாய் கலைகளை விளக்குவ தாகச் சொல்லி பென் நிக்கல்ஸன் என்ற கலைஞர் வர்ணங் களைத் தீட்டி, வருகிறார், நீள அகலத் திரையிலே, நீள அகல உயரங்கள் மூன்றையும் கற்பிதம் பண்ணமுடியும் என்று பிக்காஸோ என்ற கலைஞர் முயன்று வருகிறார். இந்த மாறுதல் எதன்பாற் பட்டதென்பதை மேல் நாட்...ார்தான்

- விளக்கவேண்டும். இந்தப் புது முறை அரூப்க் கலைகள் (Abstract Arts) என்னத்தைச் சொல்லுகின்றன என்ப தும் அவர்களுக்கே வெளிச்சம்!

39.