பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழியும் தெளிவும் ஒருகாலத்தில் தமிழ் என்றால் ஏதோ பூதபைசாசம் என்று அஞ்சியிருந்தவர் உண்டு, அந்தக் காலம் மறைந்து போய்விட்டது. தமிழ் என்றால் பண்டிதர் தவிர மற்ற வர்கள் தொடக்கூடாத பொருள் அனுபவிக்க முடியாத வஸ்து என்ற பீதியும் மறைந்துவிட்டது. இலக்கிய கர்ப்ப கிருஹத்தில் தமிழ்த் தாயைப் பூட்டிவைத்து, "எங்களுக்கே உரியவன்' என்ற வைதிக மனப்பான்மை கொண்டிருந்த பண்டிதர் குழுவிடமிருந்து தமிழை விடுதலை செய்து பிறருக்கும் தாய் இவள் என்று உணர்த்திய புகழ் இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களையே சாரும். இத்தமிழறிஞர்கள் *தமிழ் என்றால் ஒரு பாவை மட்டுமல்ல; ஒரு கலை; ஒரு கலாசாரம்; ஒரு இசை : ஒரு சிற்பம்: ஒரு மகத்தான சக்தி' என்று எடுத்துக் காட்டி னார்கள். மேலும் 'வைதிகத்' தமிழ்ப் பண்டிதர்களின் ஏகபோக ஆட்சிக்குத் தமிழை விட்டுவிடக் கூடாது என்ற கொள்கையை வற்புறுத்தி தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்திருக்கிறார்கள். தமிழ் மன்றங்களை ஸ்தாபித்திருக்கிறார்கள், தமிழன் என்ற பெருமையுணர்ச் சியையும் புகட்டி விட்டார்கள். 40