பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியும் தெளிகரம்

இதற்குக் காரணம் அவர்கள் கை யா எண்டு வரும் தமிழ் நடை. தமிழ் நடை என்றால் எளிமை, தெளிவு, லாகவம், வேகம் முதலியவை இருக்க வேண்டுமென்று அவர்கள் கூறுகிறார்கள். வாஸ்தவம், ஆனால் அவர்கள் டைய இந்தக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு, அதை முழுவதும் நன்கு உணர்ந்து கொள்ளாத மறு மலர்ச்சி யாளர்களில் சிலர் ' தமிழ் என்றால், அந்த மொழியால், யாருக்கும் எந்த விஷயத்தையும் புலப்படுத்தி விடலாம் ' என்று கருதி ஏதேதோ எழுதி வருகிறார்கள்.

தமிழ் நடையில் தெளிவு, எளிமை இருக்கவேண்டும் என்று யாவரும்தான் விரும்புகிறார்கள். ஆனால், இதற் காகக் கம்பனையும் பாரதியையும் உதாரணம் காட்டு கிறார்கள். 'கம்பனிடம் தெளிவிருக்கிறது; பாரதியிடம் தெளி விருக்கிறது ; இருவரையும் யாரும் புரிந்து கொள்ளலாம்' என்கிறார்கள். இதில் தான் கொஞ்சம் ஆலோசனை செய்ய வேண்டி யிருக்கிறது.

புரியாத எ ளி ைம * தெளிவு எளிமை இரண்டும் ஒன்று சேர்ந்து தான் இயங்கும் ; ஒன்றையொன்று பிரிக்க முடியாது; 'எளி மையே தெளிவு' என்று கருதுவது தப்பிதமான அபிப்பி ராயம். காரணம் தெளிவும், எளிமையும் வேறு வேறு பண்புகள். ஒரு பாஷையை தெளிவின்றி எளிய நடையிலும் எழுதலாம் ; அதேபோல எளிமையின்றித் தெளிவாகவும் எழுத முடி. யும். இதை உணரவேண்டும்,

  • எல்லோருக்கும் விளங்க வேண்டும். அது தானே மொழிக்கு அ ழ கு ?' என்கிறார்கள். எல்லோருக்கும்

இ. வி. 4