பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியும் தெளிவும்

என்ற அடிகளும், தால அணுக்களாய் சூக்குமத்திற் சூக்குமமாய் விளங்கும் பாரதியின் பராசக்தி விளக்கமும் எல்லோருக்கும் 4.jரியக்கூடிய எளிய பாஷை!பில் இருந்தா லும்கூட, விஷயம் கடவுள்

--- தத்துவத்தைப் பற்றி ஒரு சிறிதாவது தெரிந்தவர்களுக்குத்தான் விளங்கும்.

மில்டனின் எளிமை ஆங்கிலேயர்களுக்குப் பெருமை தேடித்தந்த மகா கவி மில்டன் 'இழந்த சுவர்க்கம்' என்ற காவியத்தை எழுதி முடித்தபோது, ' இந்த இழந்த சுவர்க்கத்தை ரொம்பவும் எளிய நடையில் 60 கு வ ாய் எழுதியிருக்கிறேன்" என்று பெருமைப்பட்டுக் கூறினான். ஆனால் அதற்கு க ேயாக்கி யானம் கூறும் ஆங்கிலப் பேராசிரியர்கள் இன்றும் திக்கு முக்காடுகிறார்கள். மாணவர்கள் மில்டனைக் கண்டு நடுங்கு கிறார்கள். அதனால் மில்டன் கூறியது தப்பு என்றாகிவிடுமா? இல்லை. * இழந்த சுவர்க்கம் ' போன்ற ஒரு காலை, அதைவிடச் சுலபமான முறையில் எழுதிவிட முடியாது என்பதை மனதில் கொண்டே அப்படிச் சொன்னான்.

ஆதலால் கம்பனிடமும், பாரதியிடமும் தெளிவிருக் கலாம். ஆனால், அவர்களை எல்லோரும் புரிந்து கொள்ளலாம் என்பது தப்பு. பாரதியிடமும் கம்பனிடமும் எவ்வளவு தெளிவு இருக்கவேண்டுமோ, அ வ் வ ள வு தெளிவிருக் கிறது. ஆனால் அவர்களிடமுள்ள trளிமையையும் தெளி வையும் கொண்டு, கல்வி நிலையில் சில படி ஏறிய வர்கள் தான் விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும் ; யாவரும் புரிந்துகொள்ள முடியாது, தெளிவு என்பது எல் லோருக்கும் புரிந்து விடும்படி விஷயத்தை எழுதி விடுவ தென்பதல்ல; அது முற்றிலும் முடியாத காரியம். ஒரு