பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம் இந்தச் சிந்தனையில் எழுந்த எண்ணங்களைப் பிறருக்கு எடுத்துக் கூறவேண்டும் என்ற ஆசை அவனைப் பிடித்து உத்துகிறது. இப்படி நெஞ்சில் இடம் பெற்று,சிந்தனை என்ற வாலைகுழாயின் மூலமாய் வடித்தெடுத்த மதுச் சாக்குத்தான், கலைகள்

மனிதன் சிந்திக்கிறான்: சிந்திப்பதைப் பிறருக்கும் எடுத்துக்கூற விரும்புகிறான்; சமயங்களில் செயல் வடிவாக் கவும் முனைகிறான்' என்ற அடிப்படையில் எழுந்தவைதான் இன்றைய மனித சமுதாயத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி, கண்கள், இலக்கியங்கள் எல்லாம். இந்த நோக்கிலே, அதாவது சிந்தனை என்ற பாதையிலிருந்து விலகாமல் ஒட்டிச் சென்றோமானால், 'கனவு' என்ற ஒரு நிலை இருப்பது தென்படும். களவு என்றவுடன் ராத்தூக்கக் கலக்கத்தில் சணும் சொப்பனாவஸ்தையைப் பற்றிப் பேச்சில்லை. களவு' என்ற பதத்திற்கு 'தனவு அல்லாதது' என்ற எதிர் மறைப் பொருள் கொண்டு பார்த்தால் நடக்கக் கூடிய, 'தடக்கக் கூடாது,' எனினும் 'நடக்காத ஒன் றைப்பற்றி மனிதன் சிந்தனை செய்வதுதான் கனவு என்று கொள்ளலாம். ஆதி மனிதன் முதல் இன்றைய மனிதன் வரை எல்லோரும் சிந்திக்கிறார்கள்; கனவு காண்கிறார்கள். தாம் இப்படி வாழவேண்டும், இப்படி யெல்லாம் வாழ்ந்தால் தன்றாயிருக்கும் என்றெல்லாம் கனவு காண்கிறான். இந்தக் கனவுகளின் உறுத்தலால் விளைந்தவைதான் இன்றைய விஞ்ஞானமும், இலக்கியமும். விஞ்ஞானம் என்பது மனிதக் கனவுகளைச் செயல் முறையில் சோதித்ததின் விளைவாக எழுந்த, திட்டவட்டமான உண்மைகளின்மேல் எழுந்த ஒரு சாஸ்திரம்; இயற்கையின் நுட்ப திட்பங்களை மனிதன் கண்ட அளவுக்கு எடுத்துக் கூறுவதே பெளதிகம். 58