பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு கதை வருஷக் கணக்காய்த் தம்பட்டம் அடிக்கும் ஆசிரியர் களுடைய கதைகள்வரை, வெற்றி பெறாமல் போவதற்குக் காரணம் பல.

சார்ல்ஸ் பிங்கர்ஸ் என்ற ஆசிரியர் சொல்கிறார் ; *இளம் எழுத்தாளர்களின் கதா பாத்திரங்களெல்லாம் லக்ஷய வடிவங்களாகவே இருக்கின்றன. ஆதலால், அந்த பாத்திரங்களோடு நாமும் ஒட்டிப் பழக முடியவில்லை; காரணம் அவர்கள் மனிதர்களாயில்லை.

தமிழ் நாட்டு எழுத்தாளர்களிடம் இந்தக் குறை இருக்கத்தான் செய்கிறது. நம்மோடு தெருவில் சுற்றித் திரியும், சிகரெட்டுக்காக அங்கலாய்க்கும் ராமசாமிக ளெல்லாம் அவர்கள் கதைகளில் பெரும் பெரும் மகாத் மாக்களாகவும், புத்தபிரான்களாகவும் மாறிவிடுகிறார்கள். இதைத்தான் பிங்கர்ஸ் குறிப்பிடுகிறார். 'பிங்கர்ஸ் சொல்லுவதுபோல், 'நமது இளம் ஆசிரியர்கள் தங்கள் பாத் திரங்களை சிருஷ்டி செய்வதால்தான் கதாம்சமும், கருத்தும், எண்ணெயும் தண்ணீருமாய் ஒன்றோடொன்று கலக்காமல் நின்று விடுகின்றன,

இரண்டாவது, இனம் எழுத்தாளர்கள் கதையின் ஆரோகண அவரோகண கதிகளை வாழ்க்கையின் உயர்வு வீழ்ச்சிகளாகவே முதலில் கணித்து விடுகிறார்கள், கதையின் ஆரோகண அவரோகண் 'கதிகள்' கதையின் உருவத்துக்கும் ஜீவனுக்கும் வலிவு ஊட்டுவன. ஆனால், கதா பாத்திரங்களின் உயர்வு, வீழ்ச்சி கதையை எல்லாச் சமயங்களிலும். " பாதிப்பதில்லை. இந்தப் பாகுபாட்டை அறியாத குறையினால்தான், இன்றும் இளம் எழுத்தாளர் களுடைய

- பேனாவில், கடற்கரையில் ஆரம்பித்து கல்ய? ணத்தில் முடி யும் கதைகளும், * * ஐயா, பிச்சை : 4சில்

8)