பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு கதை கதைகளைப் பேர் மாற்றிவிட்டு, தங்கள் கதைகள் என்று உரிமை கொண்டாடி வருகிறார்கள் ; தாங்கள் தான் இலக்கிய சாம்ராட்டுகள் என்று வாய் கூசாமல் சொல்லு) கிறார்கள். இந்த மானங்கெட்ட பிழைப்புத்தான் இலக்கிய லிபசாரம் 5ன்பது.

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்; ஆனால், இப்படி விபசாரம் செய்ய வேண்டாம் என்பதுதான் என் விசனம்.

இப்படிக் கள்ளத்தனமாக, மேல் நாட்டு கீதா பாத் திரங்களை உடை மாற்றிவிட்டு, ராஜம்மாள்களாகவும், ' லலிதாக்களாகவும் காட்டி. 144 போதிலும், நம்மால் அவர் களோடு ஒட்டிப் பழக முடியவில்லை, மெளண்ட்ரோடில் சேலைகளைக் கட்டிக்கொண்டு, அமெரிக்க ஸோல்ஜர்களை" மயக்க விரும்பிய ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்கும் இந்தக் கதாசிரியர்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

ஜோதி நிலையத்தார் வெளியிட்டிருக்கும் * காளி ' என்ற கதைவை எனக்குத் தெரிந்தவரை, தமிழில் ஆறுபேர் திருடியிருக்கிறார்கள், மார்பஸானின் ' அட்டிகை ' என்ற கதை எத்தனையோ விதத்தில் தமிழில்

- அவதாரங்கள் எடுத்துவிட்டது. ஓ ஹென்றியின் ஒரு கதையையேனும் இந்தத் திருக்கூட்டம் விட்டு வைக்கவில்லை. ஓ'ஹென்றி பூர்த்தி செய்யாமல் வைத்துப்போன கடைசிக் கதையைக் கூட, ஒருவர் திருடி விட்டார். ஒரு ரேடியோ அன்பர் சில கதைகளை நாடகமாகவே மாற்றி அமைத்து வருவதும் எனக்குத் தெரியும். இப்படியெல்லாம் தமிழ் நாட்டில், இலக்கிய விபசாரத்தனம் நடந்து வருவதற்குக் காரணம் தமிழனுக்கு வெட்க உணர்ச்சியே அற்றுப்போய்விட்டது.

31