பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம் என்பதில்லை. அந்த ஆசிரியரிடம் நேர்மை இல்லை; உண்மை இல்ல; கற்பனை இல்லை என்பதுதான், நெஞ்சில் கற் பனையே இல்லாமல், எழுதத் துணிவது என்பது. தீட்டு தின்ற பேரிளம் பெண்ணை கர்ப்பவதியாக்கும் கதையாகப் போய்விடும்,

  • உள்ளத்தில் உண்மை யொளி உண்டாயின், வாக் கினிலே ஒளி உண்டாகும்' என்று பாடிடவைத்தவன் வாக்கை இங்கு நினைப்பூட்டிக் கொள்வது நல்லது..

கதை மட்டுமல்ல-எதை எழுதுவதற்கும் முதன் முதலில் நேர்மையும், சத்தியம் வேண்டும், அவை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. நேர்மையுடன் செய்த காரியம் பிறந்த மேனியுடனே இருந்தாலும் நன்கு கிருக்கும்; தனித்து நிற்கும். தன்னுடைய மனதில் தோன்று கதை எழுதுவதைவிட, வேறு நேர்மை இருக்க முடியாது. மன உணர்ச்சிகளை வெளிக் காட்டாமல் முலாம் பூசுவத னால், உண்மை உருவம் மாறிவிடுகிறது. நெஞ்சில் உரம் வேண்டும். 2.லகத்துப் பொருள்களை உள்ளபடி பார்க்கத் திராணி வேண்டும். இரவல் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தால், ' கடலிங் கிளாஸ்' போட்டுக்கொண்டு வைக்கோலைப் புல்லென்று எண்ணி மயங்கும் மாட்டின் கதையாகப் போய்விடும்.

உள்ளத்தின் நேர்மையோடு, தன்னை இழந்து, கதா பாத்திரமாக மாறி, எழுதும் ஆசிரியனின் பாத்திர. சிருஷ்டிகள் சரித்திரப் பிரசித்தி பெற்ற பாத்திரங்களைவிட, உண்மையாக உயிர் படைத்து உலவும் நபர்களாகத் தெரிவார்கள், சரித்திரப் பிரசித்தி பெற்ற அசோகனையும், நெப்போலி கனையும்கூட, மறந்துவிட முடியும்... ஆனால், சகுந்