பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு கதை

என்னலே. கதை அsக்கிறே என்று கிசஈமிய மாகச் சொல்லும் கூற்றிலேதான் இந்தக் கேள்விக்கு விடைகிடைக்கிறது. ஆம் . உண்மையை ஒட்டிப் புளுகுதல், இல்லை- நிஜமென மயங்கச் செய்தல்

-- இந்த இரண்டு திக்கு களும் சரியான உருவ வார்ப்புடன் காலம் காம் என்ற அம்சங்களின் ஒருமை உணர்ச்சியுடன் வா£த்துவிட்டால் , அது ஒரு சிறு கதை என்று ஒருவாறு கருதலாம். கதையின் எல்லாப் பண்புகளிலும். * ஒரு சிறு' என்ற தன்மை {மட்டும் மாறாதிருந்தால், அதைச் சிறு கதை என்று ஒப்புக் கொள்ளலாம்.

இன்றைய சிறு கதைகளின் வார்ப்புத் தன்மை, உருவ அமைப்பு எல்லாம் உலகத்துக் கதாசிரியர் களிடமிருந்து கற்றுக்கொண்டதேயானாலும், பல கதைகள் பச்சைத் தமிழ் உருவத்திலேயே அமைந்திருக்கின்றன .

தமிழுக்குச் • சிறு கதை' என்ற வார்த்தைதான் புதிதே அன்றி, விஷயம் புதிதல்ல. கதை என்பது எல்லா நாட்டி, லும் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்திருக்கிறது. நம் நாட்டிலும் மரியாதை ராமன் கதைகள், பூலோக விநோதக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், மதன காமராஜன் கதை எல்லாம் இருந்துதான் வந்திருக்கின்றன, தொல்காப்பியத்தில்கூட, ' பொய்ம் மொழி' என்ற தொட ரால், கதைக்கு இலக்கணம் கூடக் கூறப்பட்டிருக்கிறது, ஆனால், நாம் கவனிக்க வேண்டியது இன்றைய சிறு கதை வளர்ச்சி . .

இன்றைய சிறு கதை வளர்ச்சிக்கு வ. வெ. சு. அய்யர் தான் சரியான வழிகாட்டி, அவருடைய நடைத் தெளிவு ஒருபுறம் இருக்க, கதாம்சம் பிறந்த மேனியுடனேயே

37