உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறப்பாடு

5

வதைக் கண்டவர்கள் அவர்கள். ஆகையால் எத்தனை பேர் வந்தாலும் இலங்கைத் தோட்டங்களில் இடம் இருந்தது. கப்பலிலே நூற்றுக்கணக்காகத் தொழிலாளர் போனார்கள்.

கண்டிக்கும் காதலுக்குங்கூடச் சம்பந்தம் உண்டு. சங்ககால நூல்களில் வரும் காதற் காட்சிகள் பல. ஒரு காதலன் தன் மனத்துக்கு உவந்த மங்கையைக் காதலித்து அவளை மணம் செய்துகொள்ள முயல்வான். அவளுடைய பெற்றோர்கள் அந்த மணத்துக்கு இசையமாட்டார்கள் என்று தெரிந்தால் காதலன் தன் காதலியை ஒருவரும் அறியாமல் அழைத்துக் கொண்டு போய்விடுவான். அதற்கு உடன் போக்கு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காதலனுடன் காதலி பிறர் அறியாமல் போய்விடுவதனால் அந்தப் பெயர் வந்தது.

தமிழ் நாட்டில் தொழில் செய்து வாழும் மக்களிடத்தில் காதல் வளரக் கண்டி துணை செய்தது. ஒருவன் தான் காதலித்த பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ முடியாது என்று தெரிந்தால் அதற்காக அவன் கவலைப்படுவதில்லை. கண்டியிலுள்ள தேயிலைத் தோட்டம் அவனை வா வா என்று அழைக்கும். கங்காணி அவனுக்குத் தூபம் போடுவான். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் அவன் தன் காதலியை அழைத்துக்கொண்டு கப்பலேறிப் போய்விடுவான். இப்படி 'ஓடிப்போன' பறவைகளுக்கு இலங்கை இடம் அளித்திருக்கிறது. இதெல்லாம் பழைய கதை.

ஆனால் இன்றும் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள இணைப்பை இறுக வைத்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தமிழ்: மற்றொன்று கதிர்