உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதிர்காமம்

131

அநுபவங்களை உடையவர்கள் இறைவனுடைய பக்தியிலே ஈடுபட்டு அவனை அணுகும்போது எல்லோரும் ஒரே நெறியில் ஒரே அநுபவச்சாலையில் செல்கிறார்கள் அல்லவா ? அதனை இந்தச் சாலை நினைப்பூட்டியது.

திஸமாராவிலிருந்து புறப்படும் கதிர்காமச் சாலையே பக்தி மணக்கும். யார் போனாலும் இரு மருங்கும் உள்ள மக்கள் 'அரோகரா!' என்று கூவுகிறார்கள். எத்தனையோ நூற்றாண்டுகளாகப் பக்தர்கள் கதிர்காம வேலனைத் தரிசித்து வருகிறார்கள். இலங்கையில் வாழ்பவர்கள் மாத்திரம் அல்ல; இந்தியாவிலிருந்து தோணிகளிலும் மரக்கலங்களிலும் பக்தர்கள் ஆர்வத்தோடு வந்து பழங்காலத்தில் தரிசித்தார்கள். பிறகு கப்பலில் வந்தார்கள். எப்படி வந்தாலும் கடைசியில் பல மைல் தூரம் கால் நடையாகவே வந்தார்கள். ஒருவர் இருவராக வராமல் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். காட்டுப் பிரதேச மாகையால் வன விலங்குகளுக்கு அஞ்சியே கூட்டமாக வந்தார்கள்.

தமிழ் நாட்டில் கதிர்காமத்துக்குப் போய் வந்தவர்கள் சொல்லும் கதைகளைக் காட்டிலும் போகாதவர்கள் சொல்லும் கதைகள் அதிகம். 'இருநூறு மைல்களுக்கு மேல் ஒரே காட்டு வழி. பக்தியில்லாதவர்களுக்கு நடக்கவே முடியாது. வழியில் காட்டு மிருகங்கள் வரும். யானை கூட்டம் கூட்டமாக வரும். அரோகரா என்று பக்தியோடு சொன்னால் வழி விட்டுவிடும்’ என்று சொல்லிப் பயமுறுத்துவார்கள். இதைக் கேட்ட புலவர் ஒருவர்,