பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

இலங்கைக் காட்சிகள்

எங்களுக்கு இருந்த மனோவேகத்தோடு அதனால் போட்டி போட முடியவில்லை.

கதிர்காமத்துக்குப் போகும் வழியில் திஸமாரா என்ற இடம் இருக்கிறது. அது பெரிய ஊர். கதிர்காமத்துக்கும் அதற்கும் பதினொரு மைல் தூரம். கதிர்காமத்துக்குப் பல திக்குகளிலிருந்தும் வரலாம். பெரும்பாலும் கொழும்பிலிருந்து புறப்பட்டு மாத்தளை என்ற ஊரின் வழியே வருபவர்களே மிகுதி. எப்படி வந்தாலும் திஸ்மாராவுக்கு வந்துதான் போக வேண்டும். கதிர்காமம் உள்ள அருள்மய நாட்டுக்குத் தோரண வாயில் திஸ்மாரா என்றே சொல்ல வேண்டும். திஸ்மாரா வரையில் நல்ல தார் ரோடு இருக்கிறது. அதன் பிறகு சாதாரணமான சாலைதான். முன் காலத்தில் காட்டுப் பாதைதான் இருந்ததாம். யாத்திரிகர்கள் இந்தப் பதினொரு மைலையும் நடந்தே கடந்தார்களாம். இப்போதுள்ள பாதையில் கார் நன்றாகச் செல்லும். உற்சவ காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தச் சாலையில் செல்வார்களாம். அதனால் எல்லாக் கார்களையும் திஸமாராவிலே நிறுத்தி விடுவார்களாம்.

திஸமாரா என்பது திஸ்ஸ மகாராமம் என்பதன் சிதைவு. திஸ்ஸன் என்ற அரசன் கட்டிய மகா ஆராமம் (பெரிய கோயில்) அந்த ஊரில் இருக்கிறது. ஊருக்கு நெடுந்தூத்திலேயே அந்தப் பௌத்தக் கோயிலின் ஸ்தூபி கண்ணுக்குத் தெரியும். அவ்வளவு உயரமானது அது. திஸ்மாரா வரையில் பலவகையா வரும் வழிகள், அங்கிருந்து ஒன்றுபடுகின்றன. வெவ்வேறு துறையில் புகுந்து வெவ்வேறு இன்ப துன்ப