இலங்கையில் இறங்கினேன்
17
தேன். சில அன்பர்களைக் கேட்டேன். "உங்களுக்குப் பறக்கவேண்டும் என்ற ஆசை மனத்தின் அடித்தளத்திலே ஆழத்தில் உங்களை அறியாமல் இருக்கிறது. அந்த ஆசை நனவில் நிறைவேறாது. ஆகவே, கனவு உண்டாகிறது" என்றார் ஒரு நண்பர். மற்றொரு நண்பர் வேறு ஒரு காரணம் சொன்னார் : “நீங்கள் போன பிறவியில் பறவையாக இருந்திருக்க வேண்டும். அந்தப் பூர்வ ஜன்ம வாசனைதான் கனவிலே வந்து வந்து நிற்கிறது” என்றார் அவர். வேறு ஓர் அன்பர் தத்துவ நூல்களைப் படித்தவர். அவர் சொன்னதுதான் எனக்குப் பொருத்தமாகத் தோன்றியது. "ஆத்மாவானது பிறவிதோறும் பல வகை வாசனைகளால் உந்தப்படுகிறது. வரவர உயர்ந்த சிந்தனைகளும் உன்னதமான பண்பும் உடையவராகச் சிலர் ஆகிறார்கள். ஆத்மா உன்னத லட்சியத்தை எட்டித் தாவும் இயல்பு இத்தகைய குறிப்புகளால் வெளிப்படும். நீங்கள் மேலே மேலே உயரவேண்டும் என்ற ஆர்வத்தோடு பண்பு பெற்று வருகிறீர்கள் என்பதற்கு அடையாளமே, நீங்கள் கனவில் பறப்பதாகக் காணும் காட்சி " என்று அந்த அன்பர் என் கனவுக்குப் பொருள் உரைத்தார். இதுதான் பொருத்த மென்று எனக்குத் தோன்றுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது ? சொல்லுங்கள்.
பறக்கிற கனவுகளில் இந்த மாதிரி அநுபவம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. அப்பொழுதெல்லாம் மிகவும் இயற்கையாக ஒரு காரியத்தைச் செய்வதுபோலத்தான் தோன்றும். ஆனால் இப்போது அடைந்த உணர்ச்சி இயற்கையாக இல்லை. முன்னால் ஜாக்கிரதைப் படுத்தினபோது எதிர்பார்த்தபடி
•2