உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

இலங்கைக் காட்சிகள்

பயங்கரமானதாகவோ,சகிக்கத் தகாததாகவோ இல்லை. 'அப்படியானால், இந்த அநுபவம் நமக்கு எப்படிப் பழையதாகத் தெரிகிறது ?'

கண்டு பிடித்துவிட்டேன். விழாக் காலங்களில் நம் நாட்டில் ராட்டினம் நட்டுக் குழந்தைகளை ஏற்றிச் சுற்றுவார்கள். அந்த ராட்டினம் இரண்டு வகை. ஒன்று குடை ராட்டினம்; பம்பரம்போலச் சுழலுவது. மற்றொன்று தொட்டில் ராட்டினம் ; தொட்டில் மாதிரி இருக்கும்; மேலும் கீழும் போய்வரும் அந்தத் தொட்டில் ராட்டினத்தில் ஏறினால் தொட்டில் மேலே போகும்போது ஒரு விதமான உணர்ச்சி ஏற்படும். விமானம் மேலே எழும்பும்போது எனக்கு ஏற்பட்ட அநுபவமும் தொட்டில் ராட்டின அநுபவமும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. அப்படியே விமானம் இறங்கும்போதுகூட அந்தத் தொட்டில் ராட்டினத்தில் கீழே வரும்போது உண்டான உணர்ச்சியே ஏற்பட்டது.

விமானம் மேலே எழும்பி வானவெளியில் பறக்கத் தொடங்கியது. அப்போது அது அசைவதாகவே தோன்றவில்லை. ஒரே இடத்தில் நிற்பதாகவே தோன்றியது. ஆனால் அதன் சத்தம் மாத்திரம் பலமாக இருந்தது. அதற்கு மேலே சத்தம் போட்டுப் பேசினார்கள், அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்கள். ரெயிலில் பிரயாணம் செய்யும்போது ஆட்டம் எடுக்கிறது. எதையாவது எழுதலாமென்றால் கை ஒரு பக்கம் பேனா ஒரு பக்கம் ஓடுகின்றன. எப்படியோ சிரமப்பட்டு எழுதினாலும் அந்த எழுத்தை நம்மாலே வாசிக்க முடியாது. ஆனால் விமானத்தில்