உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

இலங்கைக் காட்சிகள்

தெரியவரும் காலத்துக்கு முற்பட்ட செய்திகளை மகாவம்சம் தெரிவிக்கிறது. அந்த மகாவம்சத்தின் மிகப் பழைய சுவடிகள் இந்த நூல் நிலையத்தில் இருக்கின்றன.

இத்தனையையும் பார்த்ததோடு விக்கிரகப் பகுதியில் நான் கண்ட ஒரு விக்கிரகத்தைப்பற்றி அவசியம் சொல்ல வேண்டும். இலங்கையையும் தமிழ் நாட்டையும் பழங்கால முதல் பிணைத்து வைப்பதற்கு இந்த விக்கிரகம் கருவியாக விளங்குகிறது. சரித்திரக்காரர்களும், பக்தர்களும், சிற்பக் கலைஞர்களும், இலக்கிய வல்லுநர்களும், பெண்மையைப் பேணுகிறவர்களும் கருத்தோடு கண்டு எழிலைப் பாராட்டிக்களிக்கும் திருவுருவம் அது. அதுதான் பத்தினித் தெய்வமாகிய கண்ணகியின் திருவுருவம். அதைப்பற்றி இரண்டொரு வரிகளிலே சொல்லி முடித்துவிட முடியுமா?