இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“இலங்கையில் பல இடங்களில் பத்தினித் தெய்வத்துக்குக் கோயில்கள் இருக்கின்றன. சிங்களவரும் அத்தெய்வத்தை வணங்குகிறார்கள். முக்கியமாக இலங்கையின் கிழக்குப் பகுதியாகிய மட்டக்களப்பில் கண்ணகி வழிபாடு அதிகம்."
"அப்படியானால் அவ்விடங்களில் உள்ள திருவுருவங்கள் எல்லாவற்றிலுமே இரண்டு நகில்கள் இருக்கின்றனவா?"
"ஆம்; ஒற்றை நகில் உடைய உருவம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை."
இப்படி நான் பேசிக் கொண்டிருந்தபோது என் மனம் தமிழ் நாட்டில் உள்ள திருச்செங்கோட்டுக்குப் போய் நின்றது. ரெயில் ஏறாமல், பஸ் ஏறாமல் போய்