உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

இலங்கைக் காட்சிகள்

அங்குள்ள மலையில் ஏறிக் கோயிலுக்குள் புகுந்தது. அதற்குக் காரணம் கண்ணகிக்கும் அந்த மலைக்கும் தொடர்பு இருப்பதாக நான் கேள்வியுற்ற செய்திகளே.

கண்ணகி தன் கணவனை இழந்த பிறகு, தன் நகிலில் ஒன்றைப் பறித்து மதுரையின் மேல்வீசி அதை எரித்தாள். அப்பால் தன் கணவனைக் கொலை செய்த பாண்டி நாட்டில் இருக்கக்கூடாது என்று கருதி அதை விட்டு மேற்கு நோக்கிப் புறப்பட்டாள். பாண்டி நாட்டைக் கடந்து வந்து 'நெடுவேள் குன்றம்' என்னும் மலையின்மேல் ஏறினாள். சிலப்பதிகாரம் இந்தச் செய்திகளை விரிவாகச் சொல்கிறது.

“நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறிப்
பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்
தீத்தொழி லாட்டியேன் யானென்று”

ஏங்கிக் கண்ணகி நின்றாள். அப்போது தேவர்கள் வந்து அவளை வான விமானத்தில் அழைத்துச் சென்றனர். அந்த மலையில் இருந்த குறவர்கள் அவளைக் கண்டு வியந்து, கடவுளைப் பாடிக் குரவைக் கூத்தாடினார்கள்.

நெடுவேள் குன்றம் என்று மூலத்தில் உள்ள தொடருக்குத் திருச்செங்கோடு என்று உரையாசிரியர் பொருள் எழுதியிருக்கிறார். பின்னல் குறவர்கள் முருகனைப் பாடும்போது, "சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும், ஏரகமும் நீங்கா இறைவன்” என்று பாடுவதாக மூலத்தில் இருக்கிறது. இப்போது திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசர் எழுந்தருளியிருக்கிறார், ஒரு பால் பெண்ணும் ஒரு பால் ஆணுமாக அமைந்த திருவுருவம் அது. இடை சுருங்கி, கூந்தல் மேல்