உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

இலங்கைக் காட்சிகள்

களிலும் பூசை நிகழ்ந்தது. தம்பிலுவில் என்ற ஊரில் உள்ள கண்ணகியம்மனுக்கும் சிறப்பான அபிடேக ஆராதனைகள் நடைபெற்றன. அந்தக் கோயிலில் கண்ணப்பன் என்ற பூசாரி அம்மனுடைய வழிபாட்டைச் செய்து வந்தான். அவன் பச்சைக் களிமண்ணால் பானை செய்து ஆலயத்திற்கு முன்னே நெருப்பை மூட்டி அதன்மேல் பானையை வைத்து அதில் சோறு பொங்கிக் கண்ணகிக்குப் படைத்தானாம். அப்போது அவன் உணர்ச்சி மிகுதியால் கண்ணகியைப் புகழ்ந்து பதினான்கு காவியங்களைப் பாடினானாம். கண்ணகியின் திருவருள் இருந்தால் பலவகை நன்மைகள் உண்டு என்று அந்தப் பூசாரி கூறுகிறான் :

கப்பல்திசை கெட்டது கரைக்குள் அடையாதோ?
கட்டைதனில் வைத்தபிணம் மற்றுயிர்கொ ளாதோ?
உப்பளம திற்பதர் விதைக்கவிளை யாதோ?
உத்தரவு ஊமையன் உரைக்க அறி யானே?
இப்பிறவி இக்குருடு இப்பதெளி யாதோ?
சிப்பிவளர் முத்துக்கள் ததிக்குள் விளை யாவோ
செப்பமுடன் உன்கிருபை வைத்திடுவை யானால்
சீர்மேவு தம்பிலுவில் சேருமா தாவே.[1]

கண்ணகியின் திருவருள் இருந்தால், திசை கெட்ட கப்பல் தரைக்கு வந்து சேருமாம். செத்த பிணம் மயானத்துக்குக் கொண்டு போய்க் கட்டையில் வைத்த பிறகும் உயிர் பெற்றெழுமாம். உப்பு விளையும் உப்பளத்தில் கருக்காயை விதைத்தால் அது


  1. கிழக்கு இலங்கையிலே-கண்ணகி வழிபாடு என்ற கட்டுரை -'திருவருள்' எழுதியது. (ஸ்ரீலங்கா, ஆகஸ்ட், 1951).