பத்தினித் தெய்வம்
41
தவிட்டங் காயான் தென்சேரியான் - அவன்
தன்மானம் சற்றும் இல்லாண்டி
அவிட்டுத் தலைப்பாவைக் கையில் எடுத்தே
அஞ்சி அதோ ஒடிப் போறாண்டி
என்று வடசேரியார் பாடுவார்கள். உடனே,
வாழைக் காயான் வடசேரியான் - அவன்
மான ஈனம் கெட்டவண்டி
பெண்பிள்ளை பேச்சுக்கு ஆற்றாம லேஅவன்
பேரழிந் தேவெட்கிப் போறாண்டி
என்று தென்சேரியார் பாடுவார்கள்.
'இந்தக் கோயில்களில் கண்ணகி காவியம், வழக்குரை காதை என்னும் மான்மியத்தைக் கூறும் நூல்கள் ஆண்டுதோறும் வைகாசிப் பூரணை விழாக் காலங்களில் படிக்கப்படும்' என்று முதலியார் குல. சபாநாதன் ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.[1]
கண்டியில் இராசசிங்கன் என்பவன் அரசாண்டு வந்த காலத்தில் நல்ல மழை பெய்யவில்லையாம். பயிர் பச்சைகள் கருகிப் போயின. பஞ்சம் வந்தது. மழை பெய்ய என்ன செய்யலாம் என்று மன்னன் யோசித்தான். கண்ணகியை வழிபட்டால் மழை வரும் என்ற நம்பிக்கையும் பழக்கமும் பல காலமாக இருந்து வந்தன. ஆகவே, எல்லாக் கண்ணகி ஆலயங்களிலும் சிறப்பாகப் பூசை போடும்படி இராசசிங்கன் ஏவினான். கிழக்கு இலங்கையில் எல்லாக் கோயில்
- ↑ ஈழத்தின் பிரசித்த இடங்கள்-நான்காம் தமிழ் விழா மலர். ப. 163.