கண்டி விழாக்கள்
65
உவமைகளும் மேற்கோள்களும் காரணங்களும் நம் பேச்சில் சரமாரியாக வரும். நாம் முன்பு நினைத்துக் கொண்டு போகாவிட்டாலும் அந்தச் சமயத்தில் அற்புதமாகப் பல கருத்துக்கள் நமக்குச் சொல்ல வரும். பின்னால் நினைத்துப் பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கும்.
திருவள்ளுவரே இந்த அனுபவத்தைத் திருக்குறளில் சொல்கிறார். ‘இயற்கையாக நன்றாய் ஒரு பாத்தியில் பயிர் வளர்கிறது. அதற்கு நீர் பாய்ச்சினால் அது பின்னும் செழித்து வளரும் அல்லவா? நயம் தெரிந்த ரஸிகர்கள் கூடிய சபையில் ஒரு கருத்தை எடுத்துச் சொல்வதும். அத்தகையதே' என்று அவர் பாட்டால் சொல்கிறார்.
"உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று."
காலையில் பாரதி விழா முடிந்தவுடன் யாவரும் விருந்துண்டோம். அப்பால் பிற்பகலில் முதலில் மத்திய மாகாணத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது. இலங்கைப் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர் திரு அருணந்தியின் தலைமையில் அது மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அகில இலங்கை எழுத்தாளர் சங்க ஆரம்பவிழா நிகழ்ந்தது. அதற்கு வீரகேசரி ஆசிரியர் தலைமை வகித்தார். பல அன்பர்கள் பேசினார்கள். இறுதியில் நானும் பேசினேன்; ஒரு மணி நேரம் பேசினேன். எழுத்தாளனுடைய பெருமை, நிலை, கடமை என்பவற்றைப் பற்றிப் பேசியதோடு, "நம்முடைய பழந்தமிழ்ச் செல்வம் மிகப் பெரியது. அதை நாம் புறக்கணிக்கக்
5