பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

இலங்கைக் காட்சிகள்

கூடாது. நம்முடைய மரபு அழியக்கூடாது. பழமையிலே வேரூன்றிப் புதுமையிலே மலர்ச்சி பெற வேண்டும்" என்பதை வற்புறுத்தினேன்.

இலங்கைக்குப் புதியவனாகிய நான் முதல் முதலாகப் பேசிய அந்த இரண்டு பேச்சுக்களையும் அன்பர்கள் நன்றாகச் சுவைத்தார்கள் என்றே நம்புகிறேன். அந்தப் பேச்சுக்களுக்குப் பின் அன்பர்கள் என்னிடம் காட்டிய மதிப்பும், பேசிய வார்த்தைகளும், இன்றளவும் எனக்கு வரும் கடிதங்களும் இந்த நம்பிக்கைக்குச் சாட்சிகளாக இருக்கின்றன.

என் பேச்சைப்பற்றி வீரகேசரியில் 'ஊர்க்குருவி' வெளியிட்ட மதிப்புரையைப் பாருங்கள்:

‘........ வித்துவான் கி. வா. ஜ.வை முதல் முதலாக ஈழத்துக்கு அழைத்து வந்த பெருமை கண்டித் தமிழர்களையே சாரும். அவர் அன்று இரண்டு பிரசங்கங்கள் செய்தார். காலைப் பிரசங்கம் ஒன்றே முக்கால் மணி நேரம். மாலையில் சரியாக ஒரு மணி. 'பிரசங்கமென்றால், ஆகா! இதுதான் பிரசங்கம். உயிருள்ள பேச்சு இது. என்ன புலமை என்ன எளிமை எவ்வளவு ஆழம் ஒருவரையும் புண்படுத்தாத மிகப் பயனுள்ள பேச்சு!" இது காலைப் பிரசங்கத்தைப் பற்றி ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர் என்னிடம் கூறிய விமர்சனம்.

'மாலையில் எழுத்தாளர் கூட்டத்திலே, அவர் உணர்ச்சி உச்ச ஸ்தானத்தை அடைந்துவிட்டது. "எழுதுபவரெல்லாம் எழுத்தாளரா? அல்ல. தெய்வத்துக்கு அடுத்தபடி எழுத்தாளன். அவன் கையில் இருப்பது செங்கோல்! அவன் நீதி நேர்மை தவற