உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மேலே பொழிந்திருக்கும் கண்ணீர்த் துளிகள் வெறும் கண்ணீர்த் துளிகளல்ல, கலைஞர் அவர்களை இன்றைக்கு நான் சிறைச் சாலையில் சந்தித்தபோது, சிந்திய இரத்தத் துளிகள். தலைவர் கலைஞரின் சார்பாக, பொதுச் செயலாளர் பேராசிரியரின் சார்பாக, பொருளாளர் சாதிக்கின் சார் பாக, தலைமை நிலைய மாவட்ட, வட்டக் கழகங்களின் சார் பாக கழகக் கண்ணின்மணிகளைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் வாழத் துடிக்கும் சமுதாயத்தின் பிரதிநிதிகள், எதையும் தாங்கும் இதயத்தைப் பெறுவோம். விழி திறக் கட்டும்-வழி பிறக்கட்டும். கி.மனோகரன் 26. 9. 81 துணைப் பொதுச் செயலாளர் தி. மு. க. நாங்கள் குற்றவாளிகள் அல்ல! நீதிமன்றத்தில் கலைஞர் வாக்கு மூலம் 29-9-81 அன்று எழும்பூர், சென்னைப் பெருநகர 2-வது நீதிபதி ரங்கசாமி முன்னிலையில் தலைவர் கலைஞர் அவர்கள் படித்தளித்த வாக்கு மூலம். மாண்புமிகு நடுவர் அவர்களே, எங்கள் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு குறித்து சில விபரங்களை உங்கள் முன்னிலையில் அளிப்பது உண்மை களை ஒளியேற்றிக் காட்டப் பயன்படுமென்று நம்புகிறேன். சுமார் இருபதாண்டு காலமாக இலங்கையில் தமிழர் களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அவ்வப்போது கண்டித்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம், ஓரிரு மாதங்களுக்கு முன்பு இலங்கையில் எல்லை கடந்த துன்பங் களுக்கும். கொடுமைகளுக்கும், உயிர் உடமை இழப்பு