உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 களுக்கும் ஆளாகிய தமிழர்களுக்காக முதல் குரல்கொடுத்து மத்திய அரசுக்குத் தந்தித் தகவல்களை அனுப்பி, இந்தியப் பிரதமரையும் நேரிலே சந்தித்து தனது வேதனையை எடுத்து கூறியது. தமிழக சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதர வுத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றின. நாள் மாநிலம் தழுவிய அர்த்தால் ஒன்று நடத்திட குறிக்கப்படுமென ஆகஸ்டு 22-ம் நாள் தமிழக முதல்வர் பேரவையில் அறிவித்தார். 1 ஆனால் அந்த அறிவிப்பு உடனடியாக முறையாகச் செயல்பட-உரிய வழிகள் மேற்கொள்ளப்படாத காரணத் தால் செப்டம்பர் 12-ந் தேதி வரையில் அந்த அர்த்தால் தள்ளிப் போடப்பட்டது. இதற்கிடையே இலங்கையில் அமளி தொடர்ந்து கொண்டேயிருந்தது. அர்த்தாலுக்கு முன்ன தாக மாணவர் கள் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். வேறு சில கட்சிகளும் தூதரகத்திற்கு முன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தின. அப்போதுதான். தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்த தனபதி என்ற தமிழ்வாலிபன் கள வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டான். சிங் தனபதி இங்குள்ள ஆளுங்கட்சியான அ.தி.மு.க உறுப் பினர் என்ற கட்சி வட்டத்துக்குள்ளே அந்தக் கொடுஞ் செயலை அணுகாமல் வெளிநாட்டில் ஒரு தமிழனுக்கு ஏற் பட்ட அவலம் என்ற உணர்வோடு தான் தி.மு.க அதனை அணுகியது. பம்பாய் தமிழ் அகாடமி விழாவுக்கு சென்றிருந்த என் னிடம் அங்குள்ள தமிழர்கள் அகாடமி சார்பாகவும், கழகச் சார்பாகவும் தனபதி குடும்பத்திற்கு மூவாயிர ரூபாய் நிதி வழங்கினர். அதனை தனபதி குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். பெற்றுக் கொண்ட பிறகு ஆறு நாட்கள் கழித்து அந்த நிதியை தி.மு. க. பொருளாளருக்கு திருப்பியனுப்புமாறு தனபதி குடும்பத்தினர் வற்புறுத்தப்பட்டனர்.